TamilSaaga

“சிங்கப்பூர் புக்கிட் மேரா வியூ” : குடியிருப்பு பகுதியில் கொழுந்துவிட்டு எறிந்த தீ – வீடியோ உள்ளே

சிங்கப்பூரில் புக்கிட் மேரா வியூவில் பிளாக் 117ல் உள்ள 14 வது மாடி வீட்டு வாரிய குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (எஸ்சிடிஎஃப்) வெளியிட்ட பேஸ்புக் பதிவில், இரவு 7.30 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவியை அணிந்து, எரிந்து கொண்டிருந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்து தீயை அணைக்க தொடங்கினர். கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீ தண்ணீர் ஜெட் மூலம் அணைக்கப்பட்டது.

காணொளி

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 முதல் 16 வது மாடி வரை இருந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் காவல்துறை மற்றும் SCDF அதிகாரிகளால் உடனைடியாக பாத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த் தீ சமபவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை, தீக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது.

Related posts