சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 2ம் பாதியில் ஈரமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் குறுகிய கால இடியுடன் கூடிய மழை பிற்பகலில் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மழை சில சமயங்களில் மாலை வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு தென்கிழக்கு ஆசியா பகுதியில் பருவமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் சில நாட்களில், சிங்கப்பூர் முழுவதும் பரவலான மற்றும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனெனில் தற்போதுள்ள வடகிழக்கு காற்று வலுவடைந்து சிங்கப்பூர் மீது சங்கமிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. ஒட்டுமொத்தமாக, பிப்ரவரி 2022க்கான மழை, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும். இருப்பினும், குறைவான மேக மூட்டம் உள்ள நாட்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸை எட்டும். தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள வறண்ட காற்று அதிக அளவில் இருப்பதால், வெப்பமான வானிலை மற்றும் நிலையான வளிமண்டல நிலை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இருக்கலாம்.