சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடையே பல விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கப்பூரில் Omicron பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் சிங்கப்பூர் தனது VTL சேவைகள் வழியாக சிங்கப்பூருக்குள் வர தற்காலிக தடையை விதித்தது. ஆனால் அந்த தடையும் கடந்த ஜனவரி 20 இரவு 11.59 மணியுடன் முடிவடைந்துள்ளது. சிங்கப்பூரில் பதிவாகும் புதிய Omicron வழக்குகளில் 70 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களிடையே தான் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் சிங்கப்பூரின் பட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனமான Fly Scoot தற்போது தமிழகத்தின் கோவை முதல் சிங்கப்பூருக்கு எல்லா வாரங்களிலும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விமானங்களை இயக்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி துவங்கி இந்த கோவை – சிங்கப்பூர் சேவை செயல்பட்டு வருகின்றது என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் திருச்சி உள்ளிட்ட 5 இந்திய நகரங்களில் இருந்து சேவைகளை NON VTL மூலம் வழங்குகிறது Scoot. குறிப்பாக 20இக்கும் விமானங்களை திருச்சி – சிங்கப்பூர் இருமார்கமாக இயக்கி வருகின்றது Scoot நிறுவனம்.
தற்போது கூடுதல் தகவலாக 15 பிப்ரவரி 2022 முதல் 18 மார்ச் 2022 வரை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரை இயக்கப்படும் Scoot நிறுவனத்தின் Non VTL சேவைகளுக்கு 7கிலோ Hand Luggage சேர்த்து ஒரு வழி பயணத்திற்கு 5800 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று Scoot அறிவித்துள்ளது. தற்போது உள்ள இந்த Omicron சூழலில் தமிழக்தில் இருந்து சிங்கப்பூருக்கு மீகக்குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கி வருகின்றது Scoot என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பயணத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட்களில் நாள் மாற்றம் செய்யவேண்டும் என்று கருத்துபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட அந்த விலை பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புக் செய்த டிக்கெட்டை Cancel செய்து Refund பெரும் வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 1,3,4,6.7,8,10,11,13,14,15,17,18,20,21,22,24,25,27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் Scoot விமானங்கள் திருச்சி சிங்கப்பூர் மார்க்கமாக இயக்கப்படும். அதே போல வாரம்தோறும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோவையில் இருந்தும் அதேபோல வாரம் தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்தும் சிங்கப்பூருக்கு இருமார்கமாக சேவைகள் இயக்கப்படும் என்று Scoot அறிவித்துள்ளது.