TamilSaaga

‘மனிதம் போற்றும் சிங்கப்பூர்’… சாலையை கடக்க சிங்கப்பூர் முதியவருக்கு உதவிய வெளிநாட்டவர்.. மனிதாபிமானத்தை மதித்து இளைஞரை கொண்டாடும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர் நாடானது ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றது என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் தற்பொழுது மனிதாபிமானத்திற்கும் பெயர் பெற்றது என்பதை நிரூபித்து காட்டி இருக்கின்றது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வயதான முதியவர் ஒருவர், சாலையில் சிவப்பு விளங்கு தெரிந்ததும் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றார்.

அது மிகவும் பிரதானமான ரோடு என்றதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக பச்சை விளக்கு எரிவதற்குள் கடந்தாக வேண்டும். அந்த முதியவர் நடக்க சிரமப்படும் பொழுது, வெளிநாட்டு இளைஞர் ஒருவர் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றார். உடனடியாக முதியவரின் கையை பிடித்து சாலையை கடக்க உதவி புரிகின்றார். இதனை அவருக்கே தெரியாமல் வேறு ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவுடன் அனைவரின் பாராட்டுகளையும் அந்த முகம் தெரியாத வெளிநாட்டவர் பெற்றுள்ளார்.

‘எஸ்ஜி ஃபாலோஸ் ஆல்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த இந்த வீடியோவை சிங்கப்பூரின் கனிமண்பு இயக்கமும் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சிங்கப்பூரில் வாழும் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக வந்தாலும், மனிதாபிமானத்துடன் இவ்வகையான செயல்களை செய்யும் பொழுது அனைவரின் பாராட்டை பெறும் விஷயம் ஆகின்றது. மேலும், இப்பேற்பட்ட நற்செயல்கள் சிங்கப்பூர் மக்களின் மத்தியில் வெளிநாட்டவர்கள் குறித்தான பார்வையை மேம்படுத்தும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
.

Related posts