இந்த பெருந்தொற்று நம்மை இன்னும் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை, லட்சக்கணக்கான உயிர் பலிகள். பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என்று பார்க்கும் இடமெங்கும் மரண ஓலங்கள். ஆனால் இத்தனை இன்னல்கள் வந்தபோது எது நடந்தாலும் நமது வாழ்கை சக்கரம் என்பது நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். “மாற்றம்” இது மட்டும் தான் மாறாத ஒன்று என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் நிறுவனத்துக்கு நமது வாசகர் ஒருவர் அனுப்பிய காணொளி நம்மை கண்கலங்க வைத்துள்ளது.
சிங்கப்பூரில் பெருந்தொற்று பாதித்த வெளிநாட்டு ஊழியர்களை மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் கவனித்து வருகின்றது சிங்கப்பூர் அரசு. இந்நிலையில் Old சிங்கப்பூர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பிளாக் 510ல் பெருந்தொற்று பாதித்த ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பாடல்களை இசைத்து அவர்களை ஊக்கப்படுத்துகின்றனர். பெருந்தொற்று பாதித்த வேலையிலும் அதை பொறுப்படுத்தாது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான சிகிச்சைகளை பெற்று வெளிநாட்டு தொழிலாளர்கள் குணமடைந்து வருகின்றனர்.
இந்த காணொளியில் நாம் பார்க்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் பெருந்தொற்று பாதித்தவர்கள் தான். இவர்களிடையே உள்ள அந்த மனதைரியம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். நாம் அதிக பாதுகாப்புடன் இருந்தும் சில சமயத்தில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது. அந்த நேரத்தில் இந்த தொழிலாளர்களை போலவே நாமும் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். பல்லாயிரம் மையில்களுக்கு அப்பால் எங்கோ ஓர் இடத்தில் தனது குடும்பத்தோடு குதூகலித்த நினைவுகளோடு இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடி தனது தாய்நாட்டிற்காகவும், குடும்ப நலனுக்காகவும் உழைக்கும் இந்த மக்கள் உண்மையில் “ஹீரோக்கள்” தான்.
கடந்த நவம்பர் 13ம் தேதி நிலவரப்படி 120 வெளிநாட்டு தொழிலார்களுக்கு சிங்கப்பூரில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.