சிங்கப்பூரில் பிரபல “ஸ்டார்ஹப்” நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான 39 வயது நிரம்பிய ஜாங் ஜியாஜெங்க்கு இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 20) 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணினி துஷ்பிரயோகம் மற்றும் சைபர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட 6 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2015 மற்றும் 2017க்கு இடையில் குற்றங்களை செய்தபோது ஜாங் ஸ்டார்ஹப்பில் பணிபுரிந்துள்ளார்.
ஏற்கனவே இருந்த வாடிக்கையாளர்களுக்கான மறு ஒப்பந்தத் தகுதியை சரிபார்த்து நிறுவல் நியமனங்களை ஏற்பாடு செய்தார். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான மாற்று ஒப்பந்தத் தகுதியை சரிபார்த்து நிறுவல் நியமனங்களை ஏற்பாடு செய்தல் அவருடைய பணியாக இருந்து வந்தது. மேலும் ஜாங்கின் பள்ளி கால நண்பர் ஒருவரும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில், வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஸ்டார்ஹப்பின் அமைப்பிலிருந்து வாடிக்கையாளர் விவரங்களை மீட்டெடுக்க உதவுமாறு லீ, ஜாங்கிடம் கேட்டுள்ளார். குடிப்பதற்காகவும், சூதாட்டத்தில் தனக்கு பணம் செலுத்த வேண்டியவர்களின் தகவல்களை அறிய அவர் அவ்வாறு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செயல் தவறு என்று தனக்கு தெரியும் என்று ஜாங் ஒப்புக்கொண்டார். மொத்தம் ஒன்பது சந்தர்ப்பங்களில், அவர் சந்தாதாரர்களின் முகவரிகளைப் பெற ஸ்டார்ஹப்பின் போர்ட்டல்களை அணுகியுள்ளார்.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்ததாகவும், பல்வேறு நபர்களுக்கு பணத்தை திருப்பித் தரக் கோரி துன்புறுத்தல் ரீதியான விஷயங்கள் நடந்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. ஜாங்கின் வழக்கறிஞர் “தனது கட்சிக்காரர் தனது “நண்பருக்கு உதவுகிறேன்” என்ற மனப்பான்மையில் செயல்பட்டதாகவும் கூறினார். மேலும் ஜாங் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார், ஒரு சிறு குழந்தையைப் வைத்துக்கொண்டு சிரமப்படுவதாகவும் வழக்கறிஞர் கூறினார். மேலும் தொற்றுநோய்களின் போது ஒரு முன்னணி களப்பணியாளராக அவர் “ஆபத்தை எதிர்கொண்டார்” என்றும் வழக்கறிஞர் கூறினார்.