இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குறுகிய கால பயண அனுமதிச் சீட்டின் (STVP) 14 நாள் நீட்டிப்பைப் சிங்கப்பூரில் பெற்றுள்ளார். அதாவது வரும் ஆகஸ்டு 11ம் தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மேலும் மக்கள் அதிபர் மாளிகைகுள் பெருந்திரளாக நுழைந்த நிலையில் அவர் கடந்த ஜூலை 14ம் தேதி அன்று சிங்கப்பூர் வருவதற்கு முன்பு மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூருக்கு அவர் நுழைந்தபோது அவருக்கு முதற்கட்டமாக 14 நாட்கள் short term visit pass வழங்கப்பட்டது. நாளை ஜூலை 28ம் தேதியுடன் அது முடிவடையவுள்ள நிலையில் தற்போது அவருக்கு மேலும் 14 நாட்கள் STVP நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ராஜபக்ச தனது நாட்டிற்கு “திரும்புவது குறித்து பரிசீலித்து வருகிறார்” என்று தான் நம்புவதாகக் கூறினார், இருப்பினும் அவர் நாடு திரும்பும் தேதி உறுதியாக தெரியவில்லை.
ராஜபக்ச தலைமறைவாகவில்லை என்றும், அவர் இலங்கை திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்துக்கு ஏற்ப நடத்தப்படுவார் என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார். கடந்த வாரம், சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது, அதில் “சமூக வருகைகளுக்காக சிங்கப்பூருக்குள் நுழையும் பார்வையாளர்களுக்கு பொதுவாக 30 நாட்கள் வரை STVP வழங்கப்படும்” என்றது.
மேற்குறிய இந்த வகையில் தான் ராஜபக்சவுக்கும் stvp அளிக்கப்பட்டது.