சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொற்றின் அளவு மிகக்கடுமையாக தினமும் உயர்ந்து வந்தது. அதன் காரணமாக சுகாதார அமைச்சகம் VTL சேவைகளை முடக்கவுதாக அறிவித்தது. இந்தியா மற்றும் மலேசியா உள்பட பல நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த இக்கட்டான சூழலில் தான் நமது சிங்கப்பூர் உள்பட பரவலாக உலக நாடுகளில் தொற்றின் அளவு குறையத்துவங்கியது. தளர்வுகள் அதிக அளவில் வழங்கப்பட்டது. சிங்கப்பூரும் தனது VTL சேவைக்கான தளர்வுகளை அறிவித்தது.
கடந்த பிப்ரவரி 21 முதல் குறிப்பிட்ட வகை பாஸ் உள்ளவர்கள் VTL சேவைக்கு VTP apply செய்யாமலே சிங்கப்பூருக்குள் வரலாம் என்று அறிவித்தது நமது அரசு. அதே நேரத்தில் இந்திய உள்ளிட்ட உலக நாடுகளுக்கு (தொற்று பாதிப்பு அதிகம் இல்லாத நாடுகளுக்கு) VTL சேவையின் அளவையும் கணிசமாக உயர்த்துவோம் என்றும் அறிவிக்கப்பட்டது. VTL மூலம், வேலைவாய்ப்பு பாஸ், Dependent அல்லது எஸ் பாஸ் போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி Entry Approval இல்லாமல் சிங்கப்பூருக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு இந்த தளர்வை அறிவித்தாலும் விமான சேவை நிறுவனங்கள் இதற்கு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் தொடர்ச்சியாக பயணிகள் சிரமத்தை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் மிகப்பெரிய ஆறுதல் தரும் செய்தியாக நமது தமிழ் சாகா நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு Exclusive தகவல் தான் Entry Approval இல்லாமல் திருச்சி மற்றும் சிங்கப்பூர் மார்க்கமாக பயணிக்க Air India Express அனுமதி அளித்துள்ளது என்ற தகவல். தற்போது திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் (மேற்குறிப்பிட்ட பாஸ் உள்ளவர்கள் மட்டும்) Entry Approval இல்லமால் Air India express மூலம் பயணிக்கலாம். ஆனால்…
என்ன ஆனால் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, இந்த Entry Approval இல்லாத பயணத்திற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்பது போல, இந்த வகையில் பயணிக்கும் மக்கள் கட்டாய தனிமைப்படுத்துதலிலும் இருக்க வேண்டும். இந்த 7 நாள் தனிமைப்படுத்துதலை பயணிகள் தங்கள் இடங்களிலேயே வழங்க முடியும். தனியாக அரசு வழங்கும் விடுதிகளை பயன்படுத்த தேவையில்லை. 7 சொந்த வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு பிறகு அவர்கள் சமூகத்தில் கலக்க அனுமதிக்கப்படுவார்கள்.