கடந்த மார்ச் 24ம் தேதி சிங்கப்பூரின் பெருந்தொற்று நிலை குறித்து பேசிய நமது பிரதமர் லீ சில முக்கிய தளர்வுகள் குறித்த அறிக்கைகளை வெளியிட்டார்.
அதில், இனி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் மார்ச் 31 அன்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தாலே இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்றும் இனி அவர்கள் Entry Approval பெறவேண்டிய அவசியம் இருக்காது (தனிமைப்படுத்துதலும் இல்லை). என்றும் அறிவித்தார்.
சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது. மேலும் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டியதில்லை. தினசரி சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித Quotaகளும் இருக்காது என்றும், Entry Approval இனி அவசியமில்லை என்றும் பிரதமர் அறிவித்தார்.
இந்நிலையில், சிங்கை அரசு இந்த புதிய அறிக்கையை வெளியிட்டாலும், இன்னும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விதிமுறைகள் குறித்து எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை
இந்நிலையில் திருச்சி நந்தனா டிராவல்ஸ் சார்பில் நமக்கு சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதில், “இந்த புதிய விதிகளை ஏர்லைன்ஸ் இன்னும் அப்டேட் செய்யவில்லை. அவர்கள் இன்னமும் பழைய நடைமுறைகளை தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனால், இங்கு மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. முதலில் அரசு அறிவித்த இந்த புதிய விதி வரும் ஏப்ரல்.1ம் தேதியில் இருந்து தான் அமலுக்கு வருகிறது. ஆனால், சிலர் நேற்றே டிக்கெட் புக் செய்துவிட்டு, Entry Approval இல்லை என்று சொல்லிக் கொண்டு ஏர்போர்ட்டில் குவிந்துவிட்டனர். இதனால் சற்று சலசலப்புகள் நிலவியது. நிறைய பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
“மீடியாக்களில், ‘Entry Approval’ தேவையில்லை என்று செய்தி வந்துவிட்டதே, நீங்க எப்படி விட முடியாதுன்னு சொல்றீங்க?” என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இதில் உண்மை என்னவெனில், மக்கள் செய்தியை சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்த நிமிடம் வரை Workers-களுக்கு Entry Approval இருந்தால் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுதான் கள எதார்த்தம்.
சிங்கப்பூர் அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தாலும், ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இன்னும் அதனை அமல்படுத்தவில்லை என்பதே உண்மை. பயணிகள் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அதிகாரப்பூரவமாக இந்த புதிய நடைமுறையை அமல்படுத்திய பிறகு அவர்கள் டிக்கெட் புக்கிங் செய்து கொண்டால், பணம் வீணாக போவதை தடுக்கலாம்” என்றனர்.