சிங்கப்பூர் ஹாங்காக் அவென்யூவில் செயல்பட்டு வரும் ஜயண்ட் அங்காடியில் தொற்றுக் குழுமம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் நடந்து வந்த வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளது என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது குழுமம் கண்டறியப்பட்டுள்ள ஹவ்காங் அவென்யூ 8ல் இள்ள ப்ளாக் நம்பர் 683 க்கு எதிர் சாலைக்கு பிறகு உள்ள ப்ளாக் 506ல் ஜீன் மாதம் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அங்கு நிலைமை சரியானது.
இருப்பினும் இந்த தொற்று குழுமம் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் பொதுவாக மக்கள் வருகை குறைந்து வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்
அந்த பகுதியில் தொற்று பாதிகப்பட்ட இடங்கள் முழுதும் முகுந்த முயற்சிகளை மேற்கொண்டு தூய்மை பணிகள் நடைபெற்றதாக அந்த தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டேவிட் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதி மக்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதலை கடைபிடித்து வருகிறார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் அச்சத்தால் அங்காடிகளுக்கு வருவதை குறைத்துள்ள காரணத்தால் ஏறத்தாழ 30 சதவீதம் அளவிலான வியாபாரம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றன.