சிங்கப்பூரில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய போதைப்பொருள் குற்றவாளி நாகேந்திரன் கே தர்மலிங்கம், “தனது கல்வித் தகுதிகள் குறித்த தனது அளவை தொடர்ந்து மாற்றியமைப்பதாக” உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டதாக உள்துறை அமைச்சகம் (MHA) நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு முறையும் அவர் நீதிமன்றத்துக்கு நேர்காணலுக்கு வரும்போது குறைந்த கல்வித் தகுதியைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் செயல்படுவதாக” அமைச்சகம் மேலும் கூறியது.
நாகேந்திரன் “அறிவுசார் ஊனமுற்றவர்” அல்ல என்பதை ஏற்றுக்கொண்ட மனநல மருத்துவர்களின் சாட்சியங்களை உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வின்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாகேந்திரன் சார்பில் ஆஜரான மனநல மருத்துவர் ஒருவரும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது. “உயர்நீதிமன்றம் நான்கு வெவ்வேறு மனநல மற்றும் உளவியல் வல்லுனர்களின் நிபுணத்துவ சான்றுகள், மற்றும் அரசுத் தரப்பு மற்றும் தற்காப்புத் தரப்பின் மேலதிக சமர்ப்பிப்புகளை பரிசீலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நாகேந்திரன் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செயல்படுகிறார் என்று கருதிய உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது” என்று MHA கூறியது.
இதையும் படியுங்கள் : இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன்
அறிவுசார் இயலாமை மற்றும் குறைந்த IQ ஆகியவற்றின் அடிப்படையில் நாகேந்திரனின் மரணதண்டனையை நிறுத்துமாறு மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பிறரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஊடக கேள்விகளுக்கு MHA மேற்கூறிய பதிலை அளித்துள்ளது. வரும் நவம்பர் 10ம் தேதி தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் நாகேந்திரனுக்கு மன்னிப்பு அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கோப்புக்கான மனு கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை வரை சுமார் 55,900க்கும் அதிகமானோர் நாகேந்திரனுக்கு ஆதரவான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கருணை மனுவின்படி, நாகேந்திரன் அவரது தடயவியல் மனநல மதிப்பீட்டின் போது 69 IQ கொண்டுள்ளார் என்றும். மேலும் குறைபாடுள்ள நிர்வாக செயல்பாடு மற்றும் கவனக்குறைவு கோளாறு ஆகியவற்றைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. 42.72 கிராம் ஹெராயின் இறக்குமதி செய்ததற்காக நாகேந்திரனுக்கு கடந்த நவம்பர் 2010ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஏப்ரல் 2009ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி நுழையும் போது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப் பொருள் மூட்டையைத் தொடையில் கட்டியிருந்தவாறு பிடிபட்டார்.
தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் செய்த மேல்முறையீடு கடந்த 2011 செப்டம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பிப்ரவரி 2015ல், நாகேந்திரன் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, அதை ஆயுள் தண்டனையுடன் மாற்றுமாறு மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
நாகேந்திரனுக்கு “அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும்” என்றும், அதன் பிறகு தான் மரண தண்டனையை உறுதி செய்ததாகவும் உயர் நீதிமன்றம் கூறியது நினைவுகூரத்தக்கது.
“உதாரணமாக, சோதனைச் சாவடியில் அவர் நிறுத்தப்பட்டபோது, அவர் ‘பாதுகாப்பு பிரிவில் பணிபுரிவதாக’ மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கூறி அவர்களது தேடுதலைத் தடுக்க முயன்றார் என்றும்.
நாகேந்திரனால் எளிமையான விதிமுறைகளில் திட்டமிடவும் ஒழுங்கமைக்கவும் முடிந்தது என்றும், “சுயாதீனமாக வாழ்வதில் ஒப்பீட்டளவில் திறமையானவர்” என்றும் உயர் நீதிமன்றம் கண்டறிந்ததாக MHA தெரிவித்தது. இறுதியாக அவரது மேல்முறையீடு கடந்த மே 2019ல் நிராகரிக்கப்பட்டது மற்றும் கருணைக்காக ஜனாதிபதியிடம் அவர் செய்த மனுவும் வெற்றிபெறவில்லை. இந்த விஷயத்தில் “சிங்கப்பூர் எடுத்துள்ள அணுகுமுறை, உலகில் மக்கள் வாழ்வதற்கு சிங்கப்பூர் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகவும், ஒப்பீட்டளவில் கடுமையான குற்றங்கள் இல்லாததாகவும் இருக்க வென்றும். போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் கொலைகள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்குகிறது மற்றும் எண்ணற்ற இளைஞர்களை மற்றும் அவர்களது குடும்பங்களை அழிக்கிறது என்று” MHA தெளிவுபடுத்தியுள்ளது.