TamilSaaga

காட்டுக்குள்ள ஓடுனா மட்டும் உன்ன விட்ருவோமா? : Droneஐ வைத்து ஆளை தூக்கிய சிங்கப்பூர் போலீஸ் – ட்ரோன்களின் பயன்கள் என்ன?

சிங்கப்பூரில் கடந்த மார்ச் 2021ல், சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) வெளியிட்ட தகவலின்படி, ஜாலான் பஹார் வழியாக போலீஸ் சோதனையில் இருந்து ஒரு சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசாரிடம் இருந்து தப்பி அந்த நபர் காட்டுப் பகுதியை நோக்கி ஓடினான். உடனே சற்றும் தாமதிக்காது சிங்கப்பூர் போலீஸ் தேடுதல் நடவடிக்கைக்கு உதவ, அந்த நபர் தப்பி செல்லும் வழிகளைக் கண்டறிய ஆளில்லா விமானத்தை (Drone) அனுப்பியது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டால் இழப்பின்றி மீள்வது எப்படி? அதன் சாதக, பாதகம் என்ன? – Complete Report

சுமார் இரண்டரை மணிநேர தேடுதலுக்குப் பிறகு, அப்பகுதியின் மேல்நிலைக் கண்காணிப்பைக் கொண்டிருந்த ட்ரோனின் உதவியுடன் ஒரு கட்டுமான தளத்திற்குள் அந்த சந்தேக நபரை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், மார்ச் 2021ல் கிளமென்டி காட்டில் தொலைந்து போன மலையேறுபவர்களைத் தேடுவதற்கும் SPF ஆளில்லா விமானத்தையும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தரைவழிப் படை (GRF) அதிகாரிகள் வனப்பகுதிக்குள் மலையேறுபவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. இருப்பினும், அடர்ந்த தாவரங்கள் வெளியேறும் பாதையை அடையாளம் காண்பதில் அதிகாரிகளுக்கு கஷ்டத்தை கொடுக்க அதிர்ஷ்டவசமாக, மேலே பறந்த ட்ரோன் காவல்துறை அதிகாரிகளையும் மலையேறுபவர்களையும் காட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல உதவியது.

தேடல் நடவடிக்கைகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கூட்டத்தை நிர்வகித்தல் மற்றும் பெரிய கூட்டத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வுகளுக்கான பொது பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசாருக்கு ஆதரவாக ட்ரோன்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் தேசிய தின அணிவகுப்பு மற்றும் மெரினா விரிகுடாவில் புத்தாண்டு கவுண்டவுன் கொண்டாட்டங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் இனி ஜாலியா சைக்கிள் ஓட்டலாம்” – Round Island பொழுதுபோக்கு பாதையின் முதல் கட்டம் திறப்பு

SPF அளித்த தகவலின்படி, தெர்மல் இமேஜிங் சென்சார்கள் கொண்ட ட்ரோன்களின் பயன்பாடு கூட்டத்தின் சூழ்நிலை குறித்த மேம்பட்ட விழிப்புணர்வை காவல்துறைக்கு வழங்குகிறது. இது போலீசாருக்கு மூச்சுத் திணறல் மூலம் சிரமப்படும் மக்கள் மற்றும் நெரிசல் ஆகியவற்றை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது. இரவில் கூட – அவர்கள் சரியான நேரத்தில் அவர்களுடைய சேவையை இதனால் அளிக்க முடியும். ட்ரோன்களில் ஸ்பீக்கர்களும் உள்ளன, பொது பாதுகாப்பு செய்திகளை கூட்டத்திற்கு ஒளிபரப்ப காவல்துறையை இது அனுமதிக்கிறது. அவசரநிலை அல்லது பெரிய பாதுகாப்பு சம்பவத்தின் போது அறிவுறுத்தல்கள் உட்பட பல செயல்களை செய்ய உதவுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts