சிங்கப்பூரின் மகப்பேறு மருத்துவர்களில் மிக முக்கியமானவரான டாக்டர் Oon Chiew Seng அவர்கள் காலமானார். அவருக்கு வயது 106.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார் என்று அவரது மருமகனும், டாக்டருமான கேப்ரியல் ஓன் கூறினார். ஆனால், தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகி வந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து அவரால் சாப்பிட கூட வாய்த் திறக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது முஷ்டிகள் இறுக ஆரம்பித்து, பார்வையையும் முற்றிலுமாக இழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உயிரும் பிரிந்தது என்று மருமகன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் தனது பேஸ்புக்கில் மருத்துவர் Oon Chiew Seng சேவையை போற்றி பதிவிட்டுள்ளார். தனது வாழ்க்கையையே சிங்கப்பூருக்காக அர்ப்பணித்ததாக நினைவு கூர்ந்தார்.
டாக்டர் ஊன் 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) கௌரவப் பட்டத்தைப் பெற்றார். இது மருத்துவக் கல்வி மற்றும் பொதுச் சேவைக்காக அவரது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பிற்காக ஜனாதிபதி ஹலிமாவால் வழங்கப்பட்டது.
10 குழந்தைகளில் இளையவரான டாக்டர் ஊன் 1916 இல் பினாங்கில் பிறந்தார். 1930களில் செவிலியராக பணிபுரிந்தார்.
பின்னர் அவர் NUS இன் முன்னோடி நிறுவனமான சிங்கப்பூரில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்தார். அதில், 1948ல் பட்டமும் பெற்றார்.
இரண்டாம் உலகப் போரின் போது, அவர் இந்தியாவில் தனது படிப்பைத் தொடர்ந்தார், அங்கு அவர் 16 குழந்தைகளுடன் நான்கு குடும்பங்கள் பகிர்ந்து கொண்ட ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். அதன் கூரை மற்றும் சுவர்கள் வழியாக மழைநீர் தொடர்ந்து கசிந்து கொண்டிருந்தது. அப்படியொரு கடினமான நிலைகளில் இருந்து முன்னேறி வந்தவர் டாக்டர் ஊன்.
பெண்கள் மேற்படிப்புக்கு உதவி, 85 ஓய்வில்லாத உழைப்பு, வசதி குறைவானோருக்கு இலவச சிகிச்சை, பெண்கள் முன்னேற்றம் என்று சிங்கப்பூரில் தனது மக்களுக்காக உழைத்து உழைத்து ஓடானவர் டாக்டர் ஊன் என்றால் அது மிகையாகாது.