TamilSaaga

“சிங்கப்பூர் 113 ஆங் மோ கியோ அவென்யூ” : கட்டாய தொற்று சோதனைக்கு அழைப்பு – என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

சிங்கப்பூரில் 113 ஆங் மோ கியோஅவென்யூ 4ல் வசிப்பவர்களுக்கு பெருந்தொற்று பரவுவதால் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அமைச்சகத்தின் விசாரணைகளின் போது, இந்த தொகுதியில் உள்ள ஐந்து வீடுகளில் ஒன்பது நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் MOH, கடந்த ஆகஸ்ட் 28 அன்று சமூக தொற்று வழக்குகளை கண்டறிய 113 ஆங் மோ கியோ அவென்யூ 4ல் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய சோதனை நடத்தப்படும் என்று கூறியது. மேலும் இன்று ஆகஸ்ட் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 113 ஆங் மோ கியோ அவென்யூ 4ன் Void டேக்கில் கட்டாய சோதனை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

ஆகஸ்ட் 25 முதல் தெற்றுக்கு எதிர்மறையாக சோதனை செய்தவர்களுக்கு இந்த சோதனை என்பது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றதே. மேலும் சோதனை பெரும் மக்களை அடையாளம் காணும் நோக்கத்திற்காக குடியிருப்பாளர்கள் தங்கள் NRICஐ சோதனையின் போது கொண்டு வர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோதனை பற்றிய கூடுதல் தகவல்கள் துண்டு பிரசுரங்கள் மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள் வழியாக குடியிருப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் MOH குடியிருப்பாளர்களை அவர்களின் சந்திப்பு நேரத்தை கடைபிடிக்க நினைவூட்டுகிறது. மேலும் அவர்களின் உடல்நிலையை உன்னிப்பாக கண்காணிக்கவும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்துகிறது.

Related posts