TamilSaaga

சிங்கப்பூரில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தமிழ் ஊழியர் கைது – உயிரின் விலை தெரியாமல் excavator இயந்திரத்தில் விளையாட்டு – ஒரு உயிர் போச்சு!

சிங்கப்பூர்: போக்குவரத்து நிறுவன இயக்குநர் ஒருவர் முறையான பயிற்சி இல்லாமல் excavator இயந்திரத்தை இயக்கியதால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், “ஒரு தொழிலாளியின் மரணத்திற்கு காரணமாக அமைந்து, அலட்சியமாக பணியை மேற்கொண்டதாக “SKN” போக்குவரத்துச் சேவைகளின் இயக்குநர் காசி சீனிவாசனுக்கு ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் மார்ச் 1, 2019 அன்று நடந்தது. அதுமட்டுமின்றி, SKN டிரான்ஸ்போர்ட்டில் சட்டவிரோதமாக ஒரு டிரக் டிரைவர் பணியமர்த்தியதாகவும் MOM தெரிவித்துள்ளது.

அந்த டிரக் டிரைவர் தொழிலாளி, SKN வளாகத்தில் தான் ஓட்டிக்கொண்டிருந்த ஒரு டிரக்கிலிருந்து குப்பைகளுக்கான தொட்டி (Skip Bin) ஒன்றை ஏற்றிக்கொண்டிருந்தார்.

சிங்கப்பூரில் ஒரே நிறுவனத்தில் உழைச்சது போதும்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகுங்க.. வேற கம்பெனிக்கு அதிக சம்பளத்தில் மாறுவது எப்படி?

அப்போது அந்த குப்பைத் தொட்டியின் கதவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த excavator இயந்திரத்தில் மோதி அதில் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கு வந்த காசி, excavator இயந்திரத்தை இயக்கி அதை வெளியே நகர்த்தினார்.

“அவர் அவ்வாறு இயக்கிய போது, excavator இயந்திரம் டிரக்கின் அருகில் நின்று கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை பலமாக மோதியது. அதில் அந்த தொழிலாளியின் தலை குப்பைத்தொட்டியின் மீது மோதியது.

பதறிய காசி இயந்திரத்தில் இருந்து இறங்கி பார்த்த போது, அந்த தொழிலாளியின் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க – “காதலியின் நடத்தையை கேவலப்படுத்திய சொந்தங்கள்.. அடுத்த நொடி தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்” – சிங்கப்பூரில் உழைத்து இன்று ஊரே வியக்கும் வசதி வாழ்க்கை!

“விபத்திற்கு முன் இயக்குநர் காசி excavator இயந்திரத்தை இயக்குவதற்கான எந்த முறையான பயிற்சியிலும் ஈடுபடவில்லை என்றும், அதனால் excavator-யை பாதுகாப்பாக கையாளும் திறன் அவருக்கு இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று MOM தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் (WSHA) குற்றங்களுக்காக காசிக்கு ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

SKN இன் இயக்குநராக, தனது தொழிலாளியின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காகவும், சட்டவிரோத வேலைவாய்ப்பில் ஈடுபட்டதற்காகவும் அவர் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts