TamilSaaga

“சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” FB Page பெயரில் Fake அக்கவுண்ட்… “பேர் என்னன்னு அடிச்சுக் கூட கேட்பாங்க; சொல்லிடாதீங்க” – எச்சரிக்கும் SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இன்று (மார்ச் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “SIA முகநூல் பக்கம் போன்று, VERIFIED செய்யப்படாத போலி பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் அந்த போலி பக்கம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “இந்த போலி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃபேஸ்புக் பக்கம் மூலம், வாடிக்கையாளர்களை அணுகி டிக்கெட் முன்பதிவுகள் செய்து தருவதாக கோரி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கேட்பதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது” என்று SIA தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தமிழ் ஊழியர் கைது – உயிரின் விலை தெரியாமல் excavator இயந்திரத்தில் விளையாட்டு – ஒரு உயிர் போச்சு!

இந்நிலையில், இந்த போலி முகநூல் பக்கம் மூலம் தனிப்பட்ட விவரங்களை மர்ம நபர்கள் கோரினால், “விவேகத்துடன் செயல்படுங்கள்” என்று வாடிக்கையாளர்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் அல்லது எங்கள் தொடர்பு மையங்கள் மூலமாக மட்டுமே பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று SIA செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts