TamilSaaga

டெல்டா வைரசுக்கு எதிராக 69 % திறன்கொண்ட தடுப்பூசி – விளக்கமளித்த சுகாதார அமைச்சர்

உலக அளவில் பரவி வரும் இந்த வைரஸ் நோய்க்கு பல பெயர்கள் சுட்டப்பெற்று வருகின்றன. இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் நோய்க்கு ‘டெல்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த டெல்டா வேரிஎண்ட் வைரசுக்கு எதிராக சிங்கப்பூரின் கொரோனா தடுப்பு மருந்து 69 விழுக்காடு செயல்திறன் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட பட்சத்தில் நோய்க்கான அறிகுறி உள்ளவர்களிடம் 80 முதல் 90 சதவிகிதம் மிகச்சிறப்பாக செயலாற்றும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இவ்வாண்டு மே வரை நோய் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து 1000 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் பன்னாட்டு அளவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார். மேலும் டெல்டா வகை கிருமி மற்றும் அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் சிங்கப்பூரின் பங்காக இது இருக்கும் என்றார் அவர்.

தற்போது சிங்கப்பூரில் தொற்றின் அளவு என்பது குறைந்துகொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts