TamilSaaga

சிங்கப்பூரில் SPassல் வேலைக்கு போகணுமா? செலவே இல்லாமல் வேலை கிடைக்க MOM சொன்ன இந்த Rule… சத்தமே இல்லாமல் S Pass வேலையை தட்டி தூக்குங்கள்

சிங்கப்பூரில் இருக்கும் எந்த நிறுவனத்தில் S-Pass மற்றும் Epassக்கு வேலைக்கு ஆள் எடுப்பதற்கு முன்னர் அந்த நிறுவனம் இப்படி ஒரு விளம்பரத்தினை கொடுத்தே ஆக வேண்டும். அதை கொடுக்காமல் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு ஊழியரை பணிக்கு எடுக்க கூடாது.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியருக்கும் சரியான அளவில் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும். இதனால் சிங்கப்பூரில் உள்ள அனைத்து கம்பெனி நிர்வாகமும் எல்லாருக்கும் சரியான யாயமான முறையில் பரிசீலிக்க வேண்டி Fair Consideration Framework (FCF) அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வயது, பாலினம், உள்நாட்டவர், வெளிநாட்டவர் போன்ற வேலைக்கு தாண்டிய விஷயங்களின் அடிப்படையில் பாகுபாட்டினை நிர்வாகம் காட்டக்கூடாது.

இதனால் ஒவ்வொரு s-pass வேலைக்கும் கண்டிப்பாக விளம்பரத்தினை MyCareers Futureல் செய்து விட வேண்டும். சரியான நபரை கவர்வதற்கு வேலை மற்றும் சம்பளம் ஆகியவற்றை குறித்து விளம்பரம் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: பலருக்கு வாழ்க்கை கொடுக்கும் சிங்கப்பூரில் சில நிமிடங்கள் நீங்க இருக்க வாய்ப்பு கிடைச்சா? வெளிநாட்டு ஊழியரா வாழ்ந்துட்டு decide பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்

பாரபட்சமாக அல்லது வேலையைத் துல்லியமாக தெரிவிக்காத விளம்பரங்களுடன் இணைக்கப்பட்ட S Pass விண்ணப்பங்களை MOMஆல் நிராகரிக்கப்பட்டு விடும். விளம்பரத்தில் பாரபட்சமான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் இருக்கக்கூடாது. உதாரணமாக வயது குறிப்பிடப்பட கூடாது. இதைப்போன்று மேலும் பல கட்டுப்பாடுகளும் MOM ஆல் கூறப்பட்டுள்ளது.

விளம்பரப்படுத்தப்பட்ட வேலை, S Pass விண்ணப்பத்தில் உள்ள வேலையுடன் பொருந்த வேண்டும். விளம்பரத்தில் உள்ள நிர்வாகம் தான் SPass விண்ணப்பத்திலும் இருக்க வேண்டும். சம்பளம் குறித்த தகவல்கள் மறைக்காமல் அனைவருக்கும் தெரியும் படி குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். நிறைய பேருக்கு S Pass அப்ளே செய்கிறீர்கள் என்றால் விளம்பரத்தில் இருக்கும் vacancy எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தொடர்ந்து விளம்பரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இதில் மாற்றம் செய்திருந்தால் மேலும் 14 நாட்கள் விளம்பரம் இருக்க வேண்டும்.

3 மாதங்களுக்கும் மேலாக காலாவதியான வேலை விளம்பரங்களை S Pass விண்ணப்பங்களுக்குப் பயன்படுத்த முடியாது. பணியிடத்தின் காலம் ஒரு மாதத்துக்கு குறைவாக இருந்தாலோ, சிங்கப்பூர் ஊழியரை பயன்படுத்தி கொள்வதாக இருந்தாலோ இந்த விளம்பரங்கள் தேவைப்படாது.

இதையும் படிங்க: ப்ளாஸ்டிக் மோல்டிங் டெக்னாலஜி படித்தவர்களா நீங்க.. சிங்கப்பூர் வேலைக்கு எப்டி அப்ளே செய்யலாம்… இதை மட்டும் செய்தால் போதும்… சிங்கையில் வேலை ரெடி!

இப்படி விளம்பரங்களை வைத்து தான் Spass விண்ணப்பமே MOMல் சமர்பிக்கப்படும். இதனால் நீங்கள் Spass மூலம் வேலை செய்ய தயாராகும் போது My careers future வெப்சைட்டில் உங்கள் கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவை குறித்து தீர ஆய்வு செய்து அப்ளே செய்து பாருங்கள். குறிப்பிட்ட நிர்வாகத்துக்கு உங்களின் கல்வி மற்றும் அனுபவம் போதுமானதாக இருந்தாலே அவர்களே உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் சம்பளமும் குறிப்பிடப்பட்டு இருப்பதால் உங்கள் கல்வி தகுதிக்கு என்ன சம்பளம் இருக்கும் என்பதை உங்களால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். அதை வைத்து சிங்கப்பூரில் வேலைக்கு வரும் போது உங்களுக்கு என்ன சம்பளம் இருக்கும் என்பது தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts