இந்திய தலைநகர் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக நகரங்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க தனக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“இவ்வளவு முக்கியமான ஒரு நிகழ்வுக்கு” ஒரு மாநகரின் முதல்வர் வருவதைத் தடுப்பது நாட்டின் நலனுக்கு எதிரானது.. இந்த அழைப்பு நாட்டிற்கு பெருமையும், கவுரவமும் ஆகும்” என்றும் முதல்வர் கெஜ்ரிவால் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் கூட்டம் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் High Commissioner சைமன் வோங் அவர்கள் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் வருவதற்கான அழைப்பை திரு. கெஜ்ரிவால் அவர்களுக்கு விடுத்தார். ஆனால் அவர் வருகைக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
“உலகத் தரம் வாய்ந்த அந்த மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது” என்றும் திரு கெஜ்ரிவால் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளார்.