TamilSaaga

சிங்கப்பூரில் நள்ளிரவு 3 மணிக்கு கொதித்த வெப்பம்.. அசந்து தூங்கியவர்களை அலறியடித்து ஏசி போட வைத்த வானிலை – வெப்பம் எப்போதும் தணியும்?

சிங்கப்பூரில் பொதுவாக குளிரான வானிலை நிலவும் நள்ளிரவு நேரத்தில், நேற்று மட்டும் நீங்கள் கொஞ்சம் கசகசப்பான இரவு நேரத்தை அனுபவித்திருக்க வாய்ப்புகள் உண்டு. காரணம் சிங்கப்பூரில் நேற்று ஜூலை 17 இரவிலும், இன்று ஜூலை 18 அன்று அதிகாலையிலும் 30 டிகிரி செல்சியஸைத் தொட்டது தான்.

சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பூங்காவில் அதிகாலை 2:47 மணிக்கு சரியாக 29.4°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. சிங்கப்பூர் முழுவதும் பதிவான வெப்பநிலை மாறுபாட்டின் அளவு என்பது மிகக் குறைவாகவே இருந்தது.

ஏனெனில் நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை பதிவு செய்யப்பட்ட குளிர்ந்த வெப்பநிலை என்பது மத்திய சிங்கப்பூரின் நியூட்டனில் தான், அதுவும் சரியாக 27.9°C ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தீவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஏன் இரவு நேரத்தில் இவ்வளவு வெப்பம்?

இந்த ஜூலை 2022ன் இரண்டாம் பாதியின் முதல் சில நாட்களில் வெப்பமான சூழல் தான் எதிர்பார்க்கப்படுகிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) கணித்திருந்தது.

Exclusive : “இனி எங்களுக்குனு யாரும் இல்ல.. 3 குழந்தைகளுடன் அனாதையாக பரிதவிக்கும் மனைவி..” – சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக தொழிலாளி ராஜேந்திரன்

சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வறண்ட காற்று வீசுவதால் எழும் நிலையான வளிமண்டல நிலையே இதற்குக் காரணம் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே “இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 28°C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக தீவின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் இந்த வெப்பம் அதிக அளவில் காணப்படும்.

எப்போது இந்த வெப்பம் தணியும்?

ஜூலை 2022ன் இரண்டாம் பாதியில் இந்த வெப்பம் சற்று தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களுக்கு, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள தென்கிழக்கு ஆசியப் பகுதியில் அதிக மழைப்பொழிவைக் கொண்டு வரும் அளவிற்கு பருவமழைக் காற்று மண்டலம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இம்மாத இறுதியில் இந்த வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts