TamilSaaga

“சிங்கப்பூர் பேருந்து முனையங்களில் அதிகரிக்கும் தொற்று” – 416ஆக உயர்ந்த எண்ணிக்கை

சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை சிங்கப்பூர் இதுவரை காணாத அளவில் 253 பேருக்கு தொற்று பரவல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 4) 8 பேருந்துச் சந்தைகளில் 26 புதிய கோவிட் -19 வழக்குகள் ஊழியர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 416 ஆக உள்ளது.

மேலும் சனிக்கிழமையன்று சாங்கி பொது மருத்துவமனையில் உள்ள கிளஸ்டருடன் 21 புதிய கோவிட் -19 வழக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 36 ஆக உள்ளது. சனிக்கிழமையன்று மூன்று புதிய கிளஸ்டர்களும் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 1) நிலவரப்படி, சிங்கப்பூரில் 8 பேருந்து நிலையங்களில் 314 பெருந்தொற்று வழக்குகள் நடப்பில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிக தொற்று பரவலுக்கு அவர்களது ஓய்வு இடங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் அப்போது கருதப்பட்டது. மேலும் அவர்கள் உபயோகிக்கும் கழிப்பறைகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும். அங்கு தான் அவர்கள் முகக்கவசங்களை எடுத்துவிட்டு தங்களை சுத்தம் செய்துகொள்வார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாட்டிற்கு அத்தியாவசிய தொழிலாளர்களாகிய இவர்கள் நோய்வாய்ப்படும் நேரத்தில் பெரிய அளவில் சிகிச்சைக்கு செலவு செய்யமுடியாதவர்களாக அவர்கள் உள்ளனர். ஆகையால் அவர்கள் தற்போது பயன்படுத்தும் துணி முகமூடிகளுக்கு பதிலாக முறையான அறுவை சிகிச்சை முகமூடிகளை அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்.

Related posts