TamilSaaga

சிங்கப்பூர்.. Courier கொடுக்க வந்து நொடிப்பொழுதில் “ஹீரோவாக மாறிய சிங்கப்பூரர்” – SCDF வரும் முன் தீயை அணைத்துவிட்டு சென்ற “ரியல் ஹீரோ”

சிங்கப்பூரில் சில தினங்களுக்கு முன்பு ஒரு மதர்ஷிப் வாசகர் Shopee தலத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் சரியான நேரத்திற்கு ஒரு Courier நபரின் மூலம் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் பொருளை டெலிவரி செய்தது மட்டுமல்லாமல் சட்டென்று ஹீரோவாக மாறிய தருணத்தை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த கூரியர்காரர் கடந்த மே 5 அன்று அங் மோ கியோ அவே 5ல் உள்ள அந்த வாசகரின் குடியிருப்பின் வாசலில் பொருளை இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, வாசகரின் சகோதரி, அவர்களின் வீட்டுக்குப் பின்னால் நெருப்பு எரிவதாக தெரிவித்துள்ளார்.

கார்பார்க் அருகே உள்ள நீல நிற மறுசுழற்சி தொட்டியில் அந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது, கிட்டத்தட்ட அந்த தீ இரண்டு மாடி கட்டிடம் அளவிற்கு கொழுந்துவிட்டு எரிந்தது என்றும் அந்த பெண் கூறியுள்ளார். அந்த தீயினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றபோது யாரும் அந்த தீயை அணைக்கவும் முயற்சிக்கவில்லை என்பதை அவர் கவனித்துள்ளார்.

உடனே அவர் அவசர எண் 995க்கு அழைக்க அந்த நேரத்தில் அவரது தாய் அவரை அழைத்து யாரோ அந்த தீயை அணைத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அவர் உடனே பின்னே சென்று பார்த்தபோது சற்று முன் தன் வீட்டில் Courier டெலிவரி செய்த அந்த நபர் தனி ஆளாக அங்கு நின்றுள்ளார்.

சிங்கப்பூரில் இதுவே முதல் முறை.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக லிட்டில் இந்தியாவில் உதயமாகும் “புதிய சேவை” – “தமிழ் மொழியிலும் சேவை உண்டு”!

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அருகில் கிடந்த தண்ணீர் பைப்பை எடுத்து வெறும் 5 நிமிடத்தில் அந்த தீயை அணைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். சற்று நேரத்தில் அங்கு வந்த SCDF குழுவினர் நிலைமை ஆய்வு செய்து சென்றனர்.

“புலம்பெயர் தொழிலாளர்களும் என் சொந்தங்களே” : வீட்டில் நடந்த Hari Raya கொண்டாட்டங்கள் – தொழிலாளர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த சிங்கப்பூரர்!

உண்மையில் தன்னால் அவர் நெருப்பை அணைத்த அந்த கட்சியை படமாக்கமுடியவில்லை என்று அந்த வாசகர் மிகவும் வருந்தியுள்ளார். காரணம் அந்த நேரத்தில் தான் தீயணைப்பு துறையிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அதனால் வீடியோ எடுக்க முடியவில்லை என்றும் கூறினார் அவர்.

எறிந்த அந்த பையின் அருகில் காய்ந்த புற்கள் இருந்ததால் அவர் செய்த செயல் பெரும் சேதத்தை தடுத்துள்ளது என்றும் வாசகர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts