TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு பெண்.. இருவரை தேடும் Interpol – கடுப்பில் சிங்கை ICA அதிகாரிகள்

சிங்கப்பூரில் விலை உயர்ந்த சொகுசு கைக்கடிகாரங்கள் மற்றும் பைகளை டெலிவரி செய்யும் வேலையை செய்து வரும் ஒரு தம்பதியினர் சில தினங்களுக்கு காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் லாரிகளில் உள்ள கண்டைனர்களில் ஒளிந்துகொண்டு சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்றதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க மலேசிய ஆடவர் ஒருவர் சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக தப்பிச்செல்ல அந்த தம்பதிகளை லாரியில் ஏற்றிச்சென்றதாகவும் ஊடங்களில் கேள்விக்கு ICA பதில் அளித்துள்ளது.

சிங்கப்பூரில் தினம் 18 மணி நேரம் வேலை.. மூத்த மகனாக குடும்பத்தையே சுமந்து.. இன்று “Thambi Magazine” எனும் அசைக்க முடியா ஆலமரமாக வளர்ந்து நிற்கும் தமிழன்!

“சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய அல்லது வெளியேறும் முயற்சிகளை ICA கடுமையான குற்றங்களாக கருதுகின்றது. மேலும் இதுபோன்ற வழக்குகளுக்கு குற்றவாளிகளை தண்டிக்க தயங்காது” என்று ICA செய்தித் தொடர்பாளர் ஊடங்களிடம் கூறினார்.

தப்பிச்சென்ற தம்பதிக்கு எதிராக கைது வாரண்ட் மற்றும் இன்டர்போல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை மாலை, தப்பிச்சென்ற அந்த அந்த தம்பதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

26 வயதான சிங்கப்பூர் ஆண் மற்றும் 27 வயதான தாய்லாந்து பெண்ணின் பெயர்களை போலீசார் வெளியிட்டனர் – அவர்களின் பெயர்கள் பை ஜியாபெங் மற்றும் பன்சுக் சிரிவிபா ஆகும். இந்த இருவரை பணி தீவிரமாக நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts