TamilSaaga

“சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு” : எதற்காக? – அமைச்சர் எஸ். ஈஸ்வரன் விளக்கம்

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் (SIA) சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங் இடையே அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் மார்ச் 16 வரை தினசரி விமானங்களை இயக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. “இந்த விமானங்கள் சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு ஒலிம்பிக் அதிகாரிகள், மற்றும் விளையாட்டு வீரர்களுக்கானது” என்று CNAவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக SIA நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 30) அளித்த பதிலில் ​​கூறியது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு விருதுகள் – சிறந்த டிரைவர்கள் பிரிவில் விருதுகளை குவித்த “தமிழர்கள்” – குவியும் பாராட்டு

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான வருடாந்திர உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், விளையாட்டுகளுக்கு ஆதரவாக விமான நிறுவனம் பட்டய விமானங்களை இயக்கும் என்று கூறினார். “எங்கள் இரு நாடுகளுக்கிடையேயான விமான இணைப்பு கோவிட்-க்கு முந்தைய நிலைகளில் இருந்து 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாங்கி மூலம் பட்டய விமானங்களை இயக்குவதால், மக்களிடையே பரிமாற்றத்தை மேம்படுத்த பிப்ரவரி 2022ல் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றார் அவர்.

மேலும் இந்த முடிவு “விமான நிலையம் பிராந்தியத்திற்கான இணைப்பு மையமாக உள்ளது” என்று திரு ஈஸ்வரன் பின்னர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார். “பாதுகாப்பான பயணத்திற்கான முக்கிய காரணியாக இருக்கும் COVID-19 சுகாதாரச் சான்றிதழ்களை பரஸ்பரமாக அங்கீகரிப்பது தொடர்பான இருதரப்பு விவாதங்களையும் நாங்கள் தொடர்வோம்” என்றார் அவர்.

இதையும் படியுங்கள் : “இது நான்காவது முறை” : சிங்கப்பூரில் வீடுகளுக்கான மின் கட்டணம் 5.6% உயரும் – SP குழுமம் அறிவிப்பு

விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்களை அழைத்து வருவதற்கு இது பட்டய மற்றும் தற்காலிக விமானங்களை நம்பியிருக்கும், மேலும் வணிக விமானங்கள் துணையாக இருக்கும் என்று விளையாட்டு அதிகாரி ஜாங் லியாங் டிசம்பர் 10 அன்று ஒரு மாநாட்டின் போது கூறியது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங், சிங்கப்பூர், பாரிஸ் மற்றும் டோக்கியோ போன்ற நகரங்களில் இருந்து இந்த தற்காலிக விமானங்களை ஏற்பாடு செய்வதில் சீன மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பங்கேற்கும் என்று திரு ஜாங் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts