கடந்த சில நாட்களாக சிங்கப்பூரின் புக்கிட் மேரா வியூவில் பல கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மேலும் இரண்டு கொரோனா தொற்று குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.
ப்ளாக் 119 மற்றும் 115ல் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் ப்ளாக் 119 நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனையில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ப்ளாக் 115ல் புக்கிட் மேரா உணவங்காடியில் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதில் மூன்று பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களோடு தொடர்பில் இருந்ததால் தனிமைபடுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். புக்கிட் மேரா வியூ ப்ளாக் 115, உணவங்காடிக்கு தொடர்புடைய மொத்தம் 78 நபர்கள் கொரோனாவால் இதுவரை பாதிக்கபபட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி கொரோனா பரவும் சூழலில் புக்கிட் மேரா மையத்தில் உள்ள NTUC Fair price அங்காடியில் சென்று இருந்தவர்கள் இடையே கொரோனா பரவல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக புக்கிட் மேரா மையத்தின் உணவங்காடி சென்று வந்தவர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை ஜீன்.3 முதல் நடைபெறுகிது.
இந்நிலையில் புக்கிட் மேரா வியூவில் கொரோனா பரிசோதனை நடத்தும் பணி முழுவதுமாக முடிந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது