TamilSaaga

சிங்கப்பூரில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு!

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதை நாம் செய்திகளாக கண்டு வருகின்றோம். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டு வருவதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையானது 965 என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்கு முந்தைய வாரத்தில் எண்ணிக்கையானது 763 என பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 23 லிருந்து 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை 58 ஆயிரத்தி 300 என மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா நோய் தொற்றானது அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அரசு வாரம் ஒரு முறை வெளியிட்டு வருகின்றது. எனவே கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts