இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது இந்த பெருந்தொற்று நம்மை ஆட்கொண்டு, சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 2019ம் ஆண்டு வெறும் ஒற்றை தொற்றாக துவங்கியது இந்த கொரோனா என்ற அரக்கன். இன்று உலக அளவில் சுமார் 190-க்கும் அதிகமான நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல கோடி தொற்றுகளாக உருவெடுத்து நம்மை ஆட்டிப்படைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல மருத்துவர்களின் கடின உழைப்பால் தற்போது நம்பிக்கை தரும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.
நமது சிங்கப்பூரும் உலகில் அளவில் சிறந்த முறையில் அதிக அளவில் தடுப்பூசிகளை மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த புத்தாண்டில் ஒரு நம்பிக்கை ஒளியும் நம்மிடையே பிறந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது. Omicron என்ற புதிய அரக்கன் நம்மிடையே இருந்தாலும் நிச்சயம் தடுப்பூசி மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழியாக அதனை வெல்வோம் என்றும் நம்பிக்கை பிறந்துள்ளது.
தற்போது பிறந்திருக்கும் இந்த புத்தாண்டையொட்டி பலரும் நம்பிக்கை தரும் பதிவுகளை தங்களது சமூக ஊடகங்கள் வழியாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜ் காந்தி என்ற தமிழர் தற்போது நமது சிங்கப்பூரில் சாங்கி விமானநிலைய முனையம் 5 கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அவர் தனது சகாக்களுடன் வெளியிட்ட பதிவில் “மலர்ந்த வருடத்தில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்! இனி இன்பங்கள் கூடட்டும் புதுவருட வாழ்த்துக்கள்!” என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் சாங்கி விமானநிலைய ஐந்தாவது முனையம் 2030-களில் முடிக்கப்பட இருக்கின்றது, அதன் ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்பட்டது சுமார் 10 பில்லியன் டாலர் செலவில் Changi Airport Group (CAG) தலைமையில் பணிகள் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.