TamilSaaga
Employment Pass

Employment Passல் சிங்கை வரும் ஊழியர்கள் – COMPASS பற்றி உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்

அண்டை நாடான இந்திய உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் அதிக அளவில் சிங்கப்பூரில் வந்து பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எம்பிளாய்மென்ட் பாஸில் சிங்கப்பூர் வந்து பணி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அந்த வகையில் EP மூலம் இங்கு வருபவர்களுக்கு கூடுதல் சிறப்புகளை இந்த ஆண்டு வழங்கியுள்ளது நமது அரசு. அது குறித்து தெளிவாக இந்த பதிவில் காணலாம்.

COMPASS என்றால் என்ன?

Complementarity Assessment Framework (நிரப்புத்தன்மை மதிப்பீட்டு கட்டமைப்பு)

நிரப்புத்தன்மை மதிப்பீட்டு கட்டமைப்பு (COMPASS) என்பது EP விண்ணப்பங்களை நியாயமாக மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட புள்ளிகள் அடிப்படையிலான ஒரு அமைப்பாகும். சிங்கப்பூரில் இது பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் மூன்று முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் குறைந்தது 40 புள்ளிகளை பெற வேண்டும்.

1. அதிக வருமானம் – அதாவது நீங்கள் EP மூலம் சிங்கப்பூரில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தின் அளவு அதிகமாக அதிகமாக, அதற்கு ஏற்றார் போல COMPASS புள்ளிகளும் உயரும். இது சிங்கப்பூரில் உங்களுக்கு EP மூலம் வேலை கிடைப்பதை அதிக அளவில் உறுதி செய்யும்.

2. கல்வித் தகுதிகள் – EP மூலம் நீங்கள் சிங்கப்பூர் வரும்போது உங்களுடைய கல்வித்தகுதி அதாவது சிறந்த பல்கலைக்கழகங்களின் நீங்கள் பெற்ற பட்டம் அல்லது பட்டங்கள் உங்களுக்கு அதிக புள்ளிகளைப் பெற்றுத்தருகின்றனர்.

சிங்கையில் கடன் தரும் Loan Sharks – வெளிநாட்டு ஊழியர்கள் இவர்களை தவிர்க்கணும்! ஏன் தெரியுமா?

3. நிறுவனப் பணியாளர்களின் பன்முகத்தன்மை – உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் சமநிலையான கலவையைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரிபவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். COMPASSல் புள்ளிகள் அதிகம் கிடைக்கும்.

Related posts