TamilSaaga

குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் செல்ல இனி துணை தேவையில்லை… புதிய திட்டத்தினை அறிவித்திருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

வெளிநாடுகளில் தங்கி இருக்கும் பெற்றோர்களுக்கான ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டுமானால் கட்டாயம் பெற்றோர்கள் நாம் கூட சென்று அழைத்து வருவோம் அல்லது தாய் நாட்டுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது உடன் செல்வோம். பெற்றோர்கள் சிங்கப்பூரில் இருக்கின்றார்கள் என்றால் குழந்தைகள் பள்ளி விடுமுறைக்கு தாய் நாட்டிற்கு செல்வதற்கு நாம் கட்டாயம் கூட செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அத்தகைய சூழ்நிலைகளில் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் UMNR எனப்படும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர்களின் துணை இல்லாமல் தனியாகவே விமானத்தில் பயணம் செய்யலாம்.

குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விமான நிறுவனமே பார்த்துக் கொள்ளும். செக்-இன் முதல் தரையிறங்கும் வரை அனைத்து நடைமுறைகளையும் விமான நிறுவனத்தின் ஊழியர்களே குழந்தைகள் அருகில் இருந்து கவனமாக பார்த்துக் கொள்வதால் பெற்றோர்கள் பயமின்றி இருப்பதற்காக இந்த சேவையானது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பெற்றோர்கள் இருவரும் வெளிநாடுகளில் இருக்கும் பொழுது குழந்தைகளை மட்டும் தாய் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என நினைத்தால் இந்த சேவை பெற்றோருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். எனவே நம் குழந்தைகளை யாரேனும் உடன் அழைத்துச் செல்வார்களா? என பெற்றோர்கள் கவலை கொள்ள தேவையில்லை.

UMNR இருக்கையை எப்படி பதிவு செய்வது?

  1. airindiaexpress.com என்ற இணையதளத்திற்கு சென்று டிக்கெட் புக் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. விருந்தினர் தாவலுக்குச்(guest tab ) சென்று, ‘unaccompanied minor’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் விமானத்தைத் தேர்ந்தெடுத்து, குழந்தைகளின் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  4. UMNR படிவத்தை பூர்த்தி செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்
  5. குழந்தைகளுக்கான உணவை முன்பதிவு செய்ய விரும்பினால் கட்டணத்தை செலுத்தி நீங்கள் முன் பதிவு செய்யலாம்.

Related posts