TamilSaaga

20 சென்ட்க்கு சிக்கன் ரைஸ்… இரண்டு நாட்களுக்கு மட்டும் ஆஃபரை அறிவித்த சிங்கப்பூர் உணவகம்!

சிங்கப்பூரைச் சேர்ந்த Good Good Bird எனப்படும் உணவகம் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிக்கன் ப்ரைட் ரைஸ் வெறும் 20 செண்டுகளுக்கு வழங்கப்படும் என ஆஃபர் அறிவித்துள்ளது. இந்த உணவகம் ஆனது புளோக் 412, பிடோக் நார்த் அவென்யூ 2இல்இருக்கும் FM412 உணவங்காடியில் உணவகம் அமைந்துள்ளது. மதியம் 12:00 மணி முதல் 20 செண்டுகளுக்கு முட்டை,ஊறுகாய் ,கோழித்துண்டு ஆகியவற்றுடன் சோறும் சேர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளர் ஒருமுறை மட்டுமே ரைசினை வாங்கலாம் என்ன விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. உணவு அங்காடியில் அமர்ந்து உணவு உண்போர்க்கு மட்டுமே இந்த சலுகை எனவும் அறிவித்துள்ளது. பார்சல் மூலம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கொடுக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் ‘பந்திக்கு முன்பு’ என்ற பழமொழியின் அடிப்படையில் வேகமாக உணவகத்திற்கு சென்றால் தள்ளுபடி விலையில் உணவினை ரசித்து மகிழலாம்.

Related posts