TamilSaaga

தொழிலாளர்களுக்கான புது இயக்கத்தை தொடங்கிய சிங்கப்பூர்…வேலை செய்யும் இடத்தில் அபாயம் என்றால் தொழிலாளர்கள் இனி தைரியமாக புகார் செய்யலாம்!

சிங்கப்பூரில் வேலையிட அபாயங்களை பற்றி ஊழியர்கள் எடுத்துச் சொல்லும் வகையில் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சரியான காரணங்களுக்காக ஊழியர்கள் முறையாக புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த இயக்கம் உறுதி கொண்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு Spot, Stop and Report என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலை இடத்தில் ஊழியர்களின் உடல்நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏதேனும் அபாயங்கள் இருந்தால் அதனை எடுத்துச் சொல்லலாம் என தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தொழிலாளர்களை வலியுறுத்தியுள்ளது. எனவே சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் இதனை வரவேற்றுள்ளனர். சிங்கப்பூரில் வேலை இடத்தில் மரணம் ஏற்படுவது என்பது அடிக்கடி நாம் கேள்விப்படும் சம்பவமாக உள்ளது. கடந்த வாரத்தில் கூட 40 வயதை சேர்ந்த இந்திய ஊழியர் ஒருவர் கட்டுமான பணியின் பொழுது உயிரிழந்தார்.

எனவே இந்த திட்டம் தொடங்கப்பட்டிருப்பது நன்மை பயக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். வேலையிட விபத்துக்கள் அதிகரித்ததால் Heightened Safety Period என்ற திட்டத்தின் மூலம் ஊழியர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டமானது கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் வேலை விபத்துக்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக கருத்துக்கள் பதிவாகியுள்ளன. மேலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் எந்த அளவிற்கு வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு பிறகு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கமிட்டி தெரிவித்துள்ளது.

Related posts