TamilSaaga

செப்டம்பர் 1 முதல் சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டுக்கு அப்ளை செய்ய இது கட்டாயம்… புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூரில் வேலை செய்ய புதிதாக ஒர்க் பெர்மிட்டுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்றால் செப்டம்பர் 1 முதல், புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று MOM அறிவித்துள்ளது. இதன்படி, வொர்க் பெர்மீட்டுகளுக்கு அப்ளை செய்பவர்களின் கல்வி தகுதிகளை சரிபார்க்க 12 நிறுவனங்களை MOM நியமித்துள்ளது. எனவே செப்டம்பர் 1 முதல் விண்ணப்பிப்பவர்களின் கல்வி சான்றிதழ்கள் நியமிக்கப்பட்ட நிறுவனங்களால் சரிபார்க்கப்படும்.

இதில் உயர்கல்வி சான்றிதழ்கள், டிப்ளமோ சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பெண், சரிபார்க்கப்பட்டதற்கு சான்றாக ஒரு சான்றிதழ் கொடுக்கப்படும். எனவே ஒரு வொர்க் பர்மிட் விண்ணப்பத்துடன் அந்த சான்றிதழையும் சேர்த்து இணைக்க வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பு திட்டமானது மார்ச் மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 1 முதல் முறையாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர்களின் விண்ணப்பங்களை முதலாளிகள் ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். MOM இணையதளம் வழியாக அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம். சான்றிதழ்களை சரி பார்க்க ஒவ்வொரு நபருக்கும் கட்டணமாக 30 முதல் 60 சிங்கப்பூர் டாலர்கள் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை முடிவுகள் வெளி வருவதற்கு இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts