TamilSaaga

“குடையை கட்டி காப்பாத்திட்டோம்” : சிங்கப்பூர் ஜாலான் பெசார் கால்வாயில் தத்தளித்த பூனை – மீட்கப்பட்ட Sweet Video

சிங்கப்பூரில் வழிப்போக்கர்களின் குழு ஒன்று கால்வாயில் நிராதரவாகத் தத்தளித்துக் கொண்டிருந்த பூனையைக் காப்பாற்றுவதற்காகத் ஒன்றிணைந்த கட்சி தற்போது இணையத்தில் வைளராகி வருகின்றது. அந்த மீட்பு முயற்சியின் காட்சிகளை அந்த வழியாக சென்றவர்களில் ஒருவரின் மனைவி படமெடுத்துள்ளார். படமெடுத்த ஜெசிகா சே என்ற பெண்ணின் கூற்றுப்படி, ஜாலான் பெசார் சமூகக் கழகத்தின் பின்புறமுள்ள கால்வாயில் நேற்று பிப்ரவரி 21 திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்போது தனது கணவருடன் இருந்த அவர், தங்கள் மகனுக்கு தடுப்பூசி போடுவதற்காக சமூக கிளப்புக்கு அழைத்து வந்துள்ளார். மாலை 6:30 மணிக்கு முன்பு அவர்கள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது கால்வாயில் பூனை இருப்பதைக் கண்டனர். ஆனால் “ஏற்கனவே அங்கு ஒரு மனிதன் நீண்ட குச்சியில் கட்டிய பையை கொண்டு பூனையை வெளியே எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தார் என்றார் சே. ஆனால் எவ்வளவு முயற்சித்தாலும் அது மீண்டும் ,மீண்டும் தண்ணீரில் விழுந்து கொண்டே இருந்தது.

தோல்வியுற்ற முயற்சிகளின் காட்சிகளில், பூனை தண்ணீரில் இருந்ததால் சத்தமாக மியாவ் என்று சொல்வதை மேலே நின்றவர்கள் வரை கேட்டது. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் அந்த பூனையை மீட்க முடியவில்லை. அப்போது கால்வாயின் குறுக்கே மற்றொரு நபர் ஒரு மீன்பிடி வலையை ஒரு நீண்ட குச்சியுடன் இணைத்து அதை பயன்படுத்துமாறு கூறினார். அப்போது தான் நானும் என் கணவரும் எங்களிடம் குடை இருப்பதை உணர்ந்தோம், அதை பயன்படுத்த முயற்சி செய்தோம். இறுதியில் குடை மற்றும் மீன்படி வலை மூலம் அந்த பூனை மீட்கப்பட்டது.

சிங்கப்பூர் Punggol குடியிருப்பு பகுதி : திடீரென்று அறுந்து விழுந்த கம்பி, அந்தரத்தில் தொங்கிய தொழிலாளர்கள் – கைகொடுத்தது யார் தெரியுமா?

கம்பி வேலியை தாண்டி எனது கணவரும் மற்றொருவரும் சென்று அந்த பூனையை தூக்கி தரைக்கு கொண்டுவந்தனர் என்றார் சே. சிறிது நேரம் தனது நன்றியை அனைவருக்கும் உரித்தாகிய அந்த பூனை இறுதியில் அங்கிருந்து சென்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts