TamilSaaga

சிங்கப்பூரில் கிளினிக் வந்த பெண்ணிடம் “பாலியல் சீண்டல்” – 70 வயது மருத்துவர் மீது வழக்கு பதிவு

சிங்கப்பூரில் வயது முதிர்ந்த மருத்துவர் ஒருவர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி திங்கள் கிழமை அன்று ஆஜரானார். அந்த வயது முதிர்ந்த மருத்துவர் தான் வேலை செய்த கிளினிக்கு வந்த ஒரு பெண் நோயிலிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 70 வயதான சுவா கீ லோய் என்ற அந்த நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இந்த குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் தன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.

சம்பவத்தன்று மாலை சுமார் 7.30 மணியளவில் யிஷுன் அவென்யூ 3ல் உள்ள “சுவா கிளினிக் மற்றும் அறுவை சிகிச்சை” மையத்தில் இருந்தபோது, ​​அந்தப் பெண்ணின் வலது கன்னத்தையும் மார்பகத்தையும் இடது கையால் அந்த மருத்துவர் தொட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

சிங்கப்பூர் மருத்துவரின் ஜாமீன் கடந்த வியாழக்கிழமை 10,000 வெள்ளியாக ஆக இருந்தது இதனையடுத்து அவரது வழக்கு வரும் செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது பிரம்பு அடிகள் விதிக்கப்படலாம்.

ஆனால் குற்றவாளி 50வயதிற்கும் அதிகமான இருக்கும் நிலையில் பிரம்படி வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts