TamilSaaga

சிங்கப்பூரில் தடம்புரண்ட அதிவேக சூப்பர் கார் – மருத்துவமனையில் ஓட்டுனர்

சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச் சாலையில் காலை 7.10 மணியளவில் சாங்கியை நோக்கி கார் ஒன்று பயணித்துள்ளது.

அந்தா கார் சாலையின் ஒரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் தொட்டிகளில் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய கார் Mc Laren 720S வகை சூப்பர் கார் என்று Roads.Sg தனது முகநூல் பக்கத்தில் கூறிவருகிறது

இந்த காரை ஓட்டிய ஓட்டுனர் ராஃபிள்ஸ் சுமார் 42 வயது மதிக்கத்தக்க நபராவார். விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்தார் எனவும் இது குறித்த விசாரனை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts