சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை பெரும்பாலான மக்கள் போட்டுவிட்டனர். ஏறக்குறைய 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி, பூஸ்டரும் போட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களும் இதில் அடக்கம். எனினும், சிலர் அனைத்து தடுப்பூசிகளையும் இதுவரை போடவில்லை. இந்நிலையில், ஒரேயொரு தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் இந்தியா செல்ல முடியுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்த தெளிவான விளக்கத்தை இங்கே நமது “தமிழ் சாகா” வழங்குகிறது.
அதாவது சிங்கப்பூரில் ஒரேயொரு தடுப்பூசி செலுத்தியவர்கள் நிச்சயமாக இந்தியா செல்ல முடியும். அதில் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால், PCR டெஸ்ட் எடுத்திருந்தால் தான் டிராவல் செய்ய முடியும். காரணம், அவர் ஒரேயொரு தடுப்பூசி மட்டும் போட்டிருப்பதால் தான். அதுவே, முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், வேறு எந்த சோதனையும் எடுக்காமல் பயணம் மேற்கொள்ள முடியும்.
ஒரு ஊசி மட்டும் போட்டிருப்பதால், சிங்கப்பூரில் PCR Test எடுத்து, இந்தியாவுக்கு பயணம் செய்யலாம். அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டை இந்திய அரசின் “Air Suvidha’ Portal-ல் Registration செய்து, அதற்கு பிறகு அவரால் பயணம் மேற்கொள்ள முடியும்.
ஸோ, ஒரு தடுப்பூசி மட்டும் போட்டிருந்தால், ஏர்போர்ட்டில் டிக்கெட், விசா, PCR டெஸ்ட், Air Suvidha போன்றவற்றை கேட்பார்கள். அதுவே இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கு, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழும், Air Suvidha-வும் கேட்பார்கள்.