TamilSaaga

எஸ்.பி.எஸ் நிறுவனத்தில் பேருந்து கேப்டனாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு

எஸ்.பி.எஸ் நிறுவனத்தில் (SBS Transit Ltd) பேருந்து கேப்டனாக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பொது போக்குவரத்து சேவைகள் வழங்கி வரும் முக்கிய நிறுவனம் எஸ்.பி.எஸ். இந்த நிறுவனம் சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை சிறப்பாக வழங்கி வரும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் பேசும்போது ” 22 வயதில் எனக்கு முதலில் ஓர் உணவுக் கடையிலிருந்து பேருந்து கேப்டனாக பணியாற்றுவது சவாலாக இருந்தது.
எனது தாயின் ஊக்கம் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய பெரிய ஆற்றலை வழங்கியது. தற்போது பேருந்து கேப்டனாக மாதச் சம்பளம், சி.பி.எப் உதவியுடன் எனது குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்கிறேன். மேலும் பயண சலுகை, மருத்துவ சலுகை போன்றவற்றையும் அனுபவித்து வருவதாகவும் வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சந்தோசமாக நேரத்தை செலவிடுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எஸ்.பி.எஸ் நிறுவனத்தில் பேருந்து கேப்டனாக பணிபுரிய விருப்புமுள்ள நபர்கள் கீழ்கண்ட
https://www.surveymonkey.com/r/BusCaptain எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது 88692782 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts