சிங்கப்பூரில் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 9) முதல், சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெருந்தொற்று தடுப்பூசி பூஸ்டர் ஷாட் எடுக்க அழைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் கடந்த அக்டோபர் 3 முதல் தங்கள் பூஸ்டர் ஷாட்களைப் பெற்றுவரும் 50 முதல் 59 வயதுடையவர்களுடன் சேர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்ற இந்த குழுக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
“நமது எங்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் தங்கள் பணியின் போது பெருந்தொற்று வழக்குகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் அவர்கள் உள்ளனர்” என்று MOH தெரிவித்தது. சிறைச்சாலைகள் மற்றும் குடியிருப்பு பராமரிப்பு வசதிகள் போன்ற இடங்களில் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவார்கள் என்று MOH தெரிவித்தது. ஏனெனில் இந்த இடங்களில் தான் அதிக மனித அடர்த்தி கொண்ட உட்புற அமைப்புகள் கொண்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்தது.
“தகுதியுள்ள நபர்களுக்கு நிறுவன அமைப்புகளில் படிப்படியாக பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க பல்வேறு நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. கூடுதலாக, 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் திட்டத்தை விரிவுபடுத்துவது மக்கள்தொகையில் ஒட்டுமொத்த பாதுகாப்பை உயர்த்த உதவும் என்று சுகாதார அமைச்சகம் நம்புகிறது.
இன்று சனிக்கிழமையிலிருந்து, இந்த குழுவில் உள்ளவர்கள் இணையதளத்தில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கான சந்திப்பை முன்பதிவு செய்ய, தங்கள் முதல் இரண்டு டோஸ்களுக்கு முன்பே பதிவு செய்த மொபைல் எண்ணில் முன்பதிவு இணைப்புடன் ஒரு குறுஞ்செய்தியைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் பூஸ்டர் டோஸை எந்த தடுப்பூசி மையத்திலும் அல்லது பங்கேற்கும் பொது சுகாதார தயாரிப்பு கிளினிக்கிலும் (PHPC) பெறலாம். கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி (அக்டோபர் 7), கிட்டத்தட்ட 3,72,000 நபர்கள் சிங்கப்பூரில் தங்கள் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்.