சிங்கப்பூரில் ஹாக்கர் மையத்தில் பணிபுரியும் அல்லது அந்த இடத்தை பார்வையிட்டவர்களிடையே சுமார் ஏழு கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர் நேற்று பூன் லே பிளேஸ் உணவு மையம் மூடப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரபல மெரினா பே மையமும் தொற்று காரணமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரு மையங்களும் வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை தூய்மைப்படுத்துதல் பணிக்காக மூடப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக தொற்றின் அளவு என்பது அதிகரித்து கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. KTV குழுமம் மற்றும் ஜூரோங் துறைமுக கிளஸ்ட்டர் வழியாக நாட்டில் அதிக அளவில் தொற்று சம்பவங்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் நாட்டில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சிங்கப்பூர் அரசு. இந்த கட்டுப்பாடுகளால் நிச்சயம் தொற்றின் அளவு விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.