சிங்கப்பூரில் சம்பாரித்த பணத்தினை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். முதல்முறையாக சிங்கப்பூர் வந்திருக்கும் சிலருக்கு சின்ன குழப்பம் கூட வரும். இந்த பிரச்னைகள் உங்களுக்கும் இருந்தால் கவலையே படாதீங்க இதை படிச்சு முடிக்கும் போதும் எல்லா குழப்பத்துக்கும் விடை கிடைத்து விடும்.
சிங்கப்பூர் வந்திருக்கும் இளைஞர்கள் சம்பளமாக கொடுக்கப்படும் சிங்கப்பூர் டாலரை குடும்பத்துக்கு அனுப்ப பல வழிகள் இருக்கு இதில் சிறந்த வழிகளை தான் உங்களுக்கு சொல்ல போறோம். சிங்கப்பூரில் இருந்து லீகலா பணம் மாற்றுவதே சிறந்த வழி. ஆனால் சிலர் சர்வீஸ் கட்டணத்தில் மிச்சம் பிடிக்க ஆசைப்பட்டு குருவியிடம் பணத்தினை கொடுத்துவிடுவார்கள். இது நீங்க நினைக்கிற மாதிரி பறவைலாம் இல்லை.
இந்த நாட்டிலும் சட்டத்திற்கு புறமாக நடக்கும் சில செயல்களில் இதுவும் ஒன்று தான். ஒரு சில டாலர் தான் கட்டணம் என காசை வாங்கி இந்திய கணக்கில் போட்டு விடுவார்கள். சிலருக்கு இது சரியாக சென்று விடும். ஆனால் காலதாமதம் ஆகும். இதிலும் சிலர் பணத்தினை மொத்தமாக ஏமாற்றி விடுவதும் நடக்கிறது. கண்டிப்பாக இந்த வழியினை பின்பற்றாதீர்கள்.
இதில் சிறந்த வழி என்றால் western union மூலம் பணத்தினை இந்தியாவிற்கு அனுப்பலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் கிளைக்கு சென்று வொர்க் பெர்மிட்டை காட்டினால் மட்டுமே போதுமானது. முன்பெல்லாம் நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்களின் பெயர் மற்றும் முகவரி மட்டும் கொடுத்தால் போதும். உங்களிடம் ஒரு ரகசிய பின் நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும் அதை சொல்லிவிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் பணம் எடுத்து கொள்ளலாம்.
தற்போது western unionல் இருந்து நீங்கள் பணத்தினை சம்மந்தப்பட்டவர்களின் வங்கிக்கே மாற்றி விடலாம். உங்களிடம் சிங்கப்பூர் வங்கி கணக்கு இருந்தால் western union ஆப்பில் இருந்து பணம் அனுப்ப முடியும். ஆனால் இதில் சர்வீஸ் கட்டணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கப்படும் சர்வீஸ் கட்டணம் அதிகம் என்பதே இதில் குறையாக பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் சிறந்த வங்கியாக DBS, POSB தான் குறிப்பிடப்படுகிறது. இந்த வங்கிகளில் இருந்து பணம் அனுப்பும் போது சர்வீஸ் கட்டணமாக எதுவும் வாங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. வேலை நாட்களில் பணமும் சற்று நேரத்தில் சென்று விடும். மேலும், இதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இண்டர்நெட் பேங்கிங் மூலமாக உடனடியாகவே அனுப்பி விடலாம். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுப்பினால் அடுத்த நாளே பணம் சென்று சேரும்.
சிங்கப்பூரில் ஆங்காங்கே பணம் அனுப்பும் மிஷின்கள் வைக்கப்பட்டு இருக்கும். அதற்குரிய ஏடிஎம் கார்டுகள் உங்களிடம் இருந்தால் அந்த மிஷின்களில் நீங்க அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் எண் மற்றும் மற்ற தகவல்களை குறிப்பிட்டால் உங்க ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டு அந்த வங்கிக்கு அனுப்பப்படும். ஆனால் இது சிங்கப்பூரில் அரிதாக மட்டுமே காணப்படுக்கிறது.
நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய குடும்ப நபர் ஸ்டேட் பேங்க் மற்றும் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தால், நீங்கள் சிங்கப்பூரில் இருக்கும் அந்த குறிப்பிட்ட வங்கி கிளைக்கு சென்று அதன் மூலம் பணம் அனுப்பலாம். வங்கியிலேயே cash deposit machine இருக்கும் அதன் மூலமாகவோ பணம் அனுப்பலாம். இந்த வங்கிகளுக்கு வேலை நேரத்தில் செல்ல முடியவில்லை என்றால் மிஷின் மூலமாக அனுப்பலாம். சில வங்கிகள் ஞாயிறும் செயல்படும். இதில் சர்வீஸ் கட்டணம் பிடிக்கப்படும். மேலும், நீங்கள் எத்தனை ரூபாய் பணம் அனுப்பினாலும் உங்களுக்கு வரி பிடித்தம் செய்ய முடியாது. அதனால் சட்டரீதியாக மட்டுமே பணம் அனுப்புவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்களிடம் NRI கணக்கு இருந்தால் அதன் ஏடிஎம் இல்லை cheque வைத்து உங்கள் குடும்பத்தினரே பணத்தினை எடுத்து கொள்ளலாம். இப்படி பணம் அனுப்பினீர்கள் என்றால் உங்களுக்கு வீட்டு கடன் ஈசியாக கிடைத்து விடும். அதனால் NRI கணக்கினை நீங்கள் வைத்திருந்தால் அதிலேயே தொடர்ந்து பணம் அனுப்புங்கள்.