சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த Best Electricity என்ற மின்சார சேவை நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் (அக்டோபர் 19) சிங்கப்பூர் சந்தையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் “அவ்வாறு” சிங்கப்பூர் சந்தையை முழுமையாக மூடும் மூன்றாவது நிறுவனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எரிசக்தி சந்தையில் “எதிர்பாராத நிலையற்ற சூழ்நிலைகள்” செயல்பாடுகளைத் தொடர்வது “மிகவும் கடினம்” என்று Best Electricity தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை வியாழக்கிழமை முதல் சிங்கப்பூர் சந்தையில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது என்றும், ஆகையால் தங்களுடைய வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை SP குழுமத்திற்கு மாற்றுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “அடுத்த சில நாட்களுக்குள் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெறுவார்கள்” என்று Best Electricity கூறியுள்ளது. “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்காது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், iSwitch matrum Ohm ஆகிய நிறுவனங்கள் உலகளாவிய மொத்த எரிவாயு விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தங்கள் செயல்பாடுகளை சிங்கப்பூரில் நிறுத்துவதாக அறிவித்தன என்பது நினைவுகூரத்தக்கது. இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூர் 12 சில்லறை விற்பனையாளர்களிடையே திறந்த எரிசக்தி சந்தையின் கீழ் இருந்தன. இதன் கீழ் நுகர்வோர் SP குழுமத்திடமிருந்து நெறிப்படுத்தப்பட்ட கட்டணத்தில் மின்சாரம் வாங்கலாம் அல்லது மின்சார சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து தங்கள் தேவைகளுக்கு ஏற்ற விலை திட்டத்தில் வாங்கலாம்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) நாட்டின் மின்சார சப்பலையை பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது என்பது நினைவுகூரத்தக்கது.