சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட விமானத் தடையை நீக்கிய பிறகு, தற்போது பயணிகளை மீண்டும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் சிங்கப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும் அழைத்துச் செல்லலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நடைபெற்ற விமானம் சம்பந்தப்பட்ட இரண்டு அபாயகரமான விபத்துகளுக்குப் பிறகு, கடந்த மார்ச் 2019ல் சிங்கப்பூரில் 737 மேக்ஸ் விமானம் வணிக நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) இன்று திங்களன்று (செப்டம்பர் 6) அன்று தனது தொழில்நுட்ப மதிப்பீட்டை முடித்த பிறகு 737 மேக்ஸ் விமானம் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியதாகக் கூறியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வேறு சில விமான அதிகாரிகள் – இந்த விமானத்தின் மீதான கட்டுப்பாடுகளை முன்பு நீக்கிய பிறகு சிங்கப்பூர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல போயிங் நிறுவனத்தால் இந்த விமானத்தில் செய்யப்பட்ட வடிவமைப்பு மாற்றங்களை மதிப்பீடு செய்ததாக CAAS (Civil Aviation Authority Singapore) கூறியது. அவை அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் பிற சரிபார்க்கும் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டது.
CAAS கடந்த ஒன்பது மாதங்களில் சேவையை மீண்டும் தொடங்கிய விமானங்களின் செயல்பாட்டுத் தரவுகளையும் மதிப்பாய்வு செய்தது மற்றும் குறிப்பிடத்தக்க பாதுகாப்புப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதைக் கவனித்தது என்றும் CAAS கூறியது. கடந்த அக்டோபர் 2018 முதல் மார்ச் 2019 வரை – ஐந்து மாதங்களுக்குள் இரண்டு விபத்துகளுக்குப் பிறகு 737 மேக்ஸ் உலகளாவிய விமான அதிகாரிகளால் தரையிறக்கப்பட்டது இந்த விபத்துகளில் 346 பேர் கொல்லப்பட்டனர்.