நமது சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூ நமது குடியரசின் முதல் பூப்பந்து உலக சாம்பியனாவதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே மீதமுள்ளது. நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 18), ஸ்பெயினின் ஹுல்வாவில் நடந்த உலக பேட்மிண்டன் ஃபெடரேஷன் உலக சாம்பியன்ஷிப் அரையிறுதியில் டென்மார்க்கின் உலகின் நம்பர் 3 வீரரான ஆண்டர்ஸ் அன்டோன்சனை 23-21, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார் நமது சிங்கப்பூர் வீரர்.
இதையும் படியுங்கள் : ஆச்சர்யமூட்டும் நீண்ட நெடும் 21 நாள் ரயில் பயணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில், இந்தியாவின் 14-வது நிலை வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு எதிராக அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போட்டியில் பங்கெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஒருமுறை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு உலக நம்பர் 1-க்கு ஏறுவதற்கு முன்பு 28 வயதான இருவரும் நேரான கேம்களில் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து லோ பேசியபோது : “எனது முதல் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் விஷயங்களை அதிகமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல. எனது வழக்கமான மீட்பு மற்றும் தயாரிப்பில் ஒட்டிக்கொள்வது தான் முக்கியம். மேலும் எனது விளையாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம் அதிலும் கடினமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு எதிராக அதை நான் செயல்படுத்த வேண்டும்.
அதேபோல உலக சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இன்று நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் யார் வெல்லப்போகிறார் என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.