சிங்கப்பூரில் இந்த ஆண்டு குறைந்தபட்சம் 1,013 பேர் $17.6 மில்லியனுக்கும் குறையாமல், வேலை மோசடிகளுக்கு இரையாகி, மோசடி செய்பவர்களால் போலியான வேலைகளை வழங்குவதற்கு முன் எளிய சர்வேக்களை முடித்ததற்காக அவர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டது.
இந்த வேலை மோசடி மாறுபாடு குறித்து போலீசார் புதன்கிழமை எச்சரித்து இருக்கின்றனர். அங்கு ஏமாற்றப்பட இருப்பவர்களுக்கு ஒரு சர்வேயில் பங்கேற்குமாறு கோர வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் செய்திகளைப் பெறுவார்கள். அதில் சில கேள்விகளுக்கு பதிலளிக்க கூறுவர். கேள்விகள் பொதுவாக உணவு விநியோக தளங்கள், சுற்றுலா அல்லது நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் பற்றியதாக இருக்கும்.
பாதிக்கப்பட்டவர்கள் சர்வேக்களை முடித்தவுடன், அவர்களுக்கு ஒரு சிறிய அளவிலான கமிஷன் கிடைக்கும். பாதிக்கப்பட்டவர்கள் கமிஷன் சம்பாதிக்க முடியும் என்று நம்பிய பிறகு, மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மெசேஜை வழங்குவார்கள். அதில் மேலும் சம்பாரிக்க வேலை தேடுவோர் தொடர்பு கொள்ள இணைப்பில் அழைக்கவும் எனக் கூறி இருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புதுப்பிக்கப்பட இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் Dorms… சுத்தமான தரை… ஆரோக்கியமான கழிப்பறை… இதை செய்தாலே போதுமே? ஏக்கத்தில் ஊழியர்கள்
மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பை உயர்த்தவும் அல்லது ஆப் ஸ்டோர்களில் தங்கள் ரேங்கினை மதிப்பிட உதவுமாறு கேட்பார்கள். இந்த பணிகளைச் செய்ய மோசடி தளங்களில் கணக்குகளை உருவாக்கவும், மோசடி செய்பவர்கள் வழங்கிய வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கமிஷனை பெறத் தவறியபோது அல்லது மோசடி செய்பவர்களைத் தொடர்பு கொள்ள முடியாதபோது தான் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து கொள்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பயனர்கள் உண்மையான கணக்குகளில் லிஸ்ட்களைப் பகிர்ந்து கொள்வதற்காக தலா $50 பெறுவதால் விளம்பரங்கள் முறையானதாகத் தோன்றும். 22 வயது மாணவி ஒருவர், “டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ்”க்கான வேலைப் பட்டியலை கரோசெல்லில் பார்த்தபோது, தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறினார். ScamShield செயலியைப் பதிவிறக்கம் செய்து, அவர்களின் வங்கி, சமூக ஊடகங்கள் மற்றும் சிங்பாஸ் கணக்குகளுக்கு two factor authentication இயக்குவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அமைக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்துகிறது.
PayNow போன்ற இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளும் அமைக்கப்பட வேண்டும். www.scamalert.sg அல்லது 1800-722-6688 என்ற ஹாட்லைன் மூலம் இந்த scamகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். குறைந்த முயற்சியில் லாபகரமான வருமானத்தை வழங்கும் சந்தேகத்திற்குரிய வேலை வாய்ப்புகளை ஏற்க வேண்டாம் என்று காவல்துறை கூறியது.
இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், 1800-255-0000 என்ற போலீஸ் ஹாட்லைனை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.