உயிர் மருந்துகள் என்று அழைக்கப்படும் Biopharmaceutical நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, பெருந்தொற்று சிகிச்சைக்கான அதன் ஆன்டிபாடி மருந்தை இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கு வழங்கவுள்ளது. Evusheld என்ற மருந்து காக்டெய்லை வழங்குவதற்காக சிங்கப்பூருடன் புதிய கொள்முதல் ஒப்பந்தத்தில் அந்த நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) வெளியிட்ட செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம்”
இரண்டு “நீண்ட-செயல்பாட்டு” கொண்ட ஆன்டிபாடிகளை இணைக்கும் Evusheld – tixagevimab மற்றும் cilgavimab ஆகியவை 9,000- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களில் பெருந்தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிற்கும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது, என்று AstraZeneca நிறுவனம் கூறியது. இந்த மருந்தின் 3ம் கட்ட சோதனையானது, லேசான முதல் மிதமான பெருந்தொற்று நோயாளிகளுக்கு அறிகுறி தோன்றிய மூன்று நாட்களுக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, கடுமையான பெருந்தொற்று நிலை அல்லது இறப்புக்கான ஆபத்தை 88 சதவீதம் குறைத்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரம்ப கண்டுபிடிப்புகள் டெல்டா உள்ளிட்ட கவலையின் மாறுபாடுகளுக்கு எதிராக செயல்திறனைக் காட்டியுள்ளன, என்றும் மருந்து தயாரிப்பாளர் மேலும் கூறினார். “தற்போது கிடைக்கக்கூடிய முன்கூட்டிய தரவுகள் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டால் Evusheld செயல்திறன் கணிசமாக பாதிக்கப்படக்கூடாது என்று பரிந்துரைக்கின்றன,” என்றும் AstraZeneca நிறுவனம் தெரிவித்தது.