TamilSaaga

சிங்கப்பூரில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. மேலும் ஒரு ஊழியர் பலி – தொழிலாளர்கள் உச்சகட்ட கவனத்துடன் பணிபுரிய வேண்டுகோள்!

சிங்கப்பூரில் ஒரு பெரிய உலோக உருளைக் குழாயின் அடியில்சிக்கி ஒரு 49 வயதான தொழிலாளி கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) இறந்துள்ளார். ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் இன்று அதை உறுதி செய்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 18 டெஃபு அவென்யூ 2ல் வெள்ளிக்கிழமை மதியம் 1.55 மணியளவில் இந்த நடந்ததாகவும், உடனைடியாக இந்த சம்பவம் குறித்து தங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“புரொப்பல்லர் ஷாஃப்ட்ஸ் எனப்படும் பெரிய உலோக உருளைக் குழாய்களைத் தூக்கி இறக்கும் போது லாரி கவிழ்ந்தது இந்த விபத்து ஏற்பட்டதாக” செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“கொஞ்சம் த்ரில்லிங்காத்தான் இருக்கும் போல”.. சிங்கப்பூரில் பலநூறு அடி உயரத்தில் சினிமா பார்க்க ரெடியா? Marina Bay Sands ஹோட்டலின் புதிய முயற்சி!

“இதனால் லாரி கிரேனில் இருந்த உருளை ஒன்று உருண்டு விழுந்துள்ளது, அந்த நேரத்தில் உருளைகளை தூக்கும் பணியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த 49 வயதான உள்ளூர் தொழிலாளி உருளையால் நசுக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த SCDF படையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த நபர் குட் இயர் கான்ட்ராக்டர் நிறுவனத்தின் ஊழியர் ஆவர்.

விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், குட் இயர் கான்ட்ராக்டர் நிறுவனத்தின் அனைத்து Lifting பணிகளையும் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் MOM தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts