TamilSaaga

இந்திய வம்சாவளி சிங்கப்பூரர்.. தடையை மீறி கடலுக்கு சென்றதால் இழுத்துச்சென்ற அலை – கடலில் சிக்கியவரை காப்பாற்ற சென்று உயிரிழந்த தந்தை மற்றும் மகன்

நீந்துவதற்கு ஆபத்தான கடற்கரை பகுதிகளில் அத்துமீறி நீந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பார்வையாளர்களை எச்சரிக்கும் வகையில் கடற்கரையில் பல எச்சரிக்கைப் பலகைகள் எப்போதுமே வைக்கப்படும். இந்த சம்பவத்திலும் பல எச்சரிக்கை பதாதைகளை வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், ஆஸ்திரேலிவிற்கு சுற்றுலாப் பயணிகளாக சென்ற இரு இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரர்கள் கடலில் குளிக்க செல்லும் முன் அந்த எச்சரிக்கை பதாதைகளை பார்த்துவிட்டு கடந்து சென்றுள்ளனர். 30 வயதான சஞ்சய் பாஸ்கர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கடலுக்குள் சுமார் 100 மீட்டர் தூரம் செல்ல உடனே அலைகளால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இறுதியில் அவர் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்த போதிலும், ஒரு ஆஸ்திரேலிய தந்தை மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் அவரைக் காப்பாற்ற முயன்று கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு ஆண்ட்ரூ ஃபிரான்சிஸ் பவல், 32, மற்றும் அவரது தந்தை, திரு ரோஸ் வில்லியம் பவல், 71, ஏப்ரல் 21, 2019 அன்று திரு. சஞ்சய்யைக் காப்பாற்ற முயன்றபோது இறந்தனர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் இந்த சம்பவம் குறித்த கண்டுபிடிப்புகளை வெளியிட்டது, அந்த மகன் மற்றும் தந்தை பயன்படுத்திய மீட்புப் படகு கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளது.

Breaking : 12 ஆண்டுகளாக நடந்து வந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் – சிங்கப்பூரில் இன்று தூக்கிலிடப்பட்டார்!

ஆண்டி என்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் அன்புடன் அழைக்கப்படும் திரு. ஆண்ட்ரூ பவல், தனது முதல் குழந்தை பிறக்க தனது மனைவியுடன் இணைந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று காலை, திரு. சஞ்சய் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள கிரேட் ஓஷன் ரோடுக்கு அருகில் உள்ள ஷெர்புரூக் ஆற்றுக்கு தனது நண்பர் பாலச்சந்திரன் என்பவருடன் சென்றுள்ளார். தடையை மீறி தான் சிறந்த நீச்சல் வீரர் என்று கூறிக்கொண்டு அவர் நீந்தவும் சென்றுள்ளார்.

சிங்கப்பூர் Bukit Batok பகுதி.. Super Marketல் பெண்ணின் பின்புறத்தை தடவிவிட்டு ஓடிய முதியவர் – விரட்டிச்சென்று “Spot Punishment” கொடுத்த வீர மங்கை

அப்போது அதீத அலை அவரை அடித்துச்செல்ல உடனே அருகில் இருந்த andrew மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் அவரை காப்பாற்ற ஒரு சிறிய படகில் சென்றுள்ளனர். அப்போது படகு திடீரென்று நிலைகுலைந்ததால் அவரை காக்கும் முன்பே இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.

ஆஸ்திரேலியா அரசு அவர் மீது கிரிமினல் குற்றம் சுமத்தவில்லை என்றபோது, அவருடைய அஜாக்ரதையால் அவர் உயிருடன் விளையாடியது மட்டுமல்லாமல் மேலும் இரு உயிர்கள் போக காரணமாக இருந்துள்ளார் என்று கூறியுள்ளது. இனியாவது அனைவரும் பொது இடங்களில் உள்ள எச்சரிக்கைகளை கவனித்து செயல்பட வேண்டும் என்று அரசு கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts