சிங்கப்பூரில் கடந்த திங்களன்று (ஆகஸ்ட் 23) உட்லேண்டில் உள்ள வடக்கு கடற்கரை விடுதியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கண்டறியப்பட்ட அனைத்து 62 பெருந்தொற்று வழக்குகளை சேர்ந்தவர்களும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் விடுதியில் மீதமுள்ள வழக்குகள் முன்கூட்டிய சோதனை மூலம் கண்டறியப்பட்டன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பணியாளர்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என்றும். மேலும் அவர்கள் நோய்க்கு அறிகுரியற்ற நிலையில் அல்லது லேசான ARI அறிகுறிகளைக் கொண்டிருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. மேலதிக கவனிப்பு மற்றும் சிகிச்சைக்காக அவர்கள் ஒரு சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று MOM தெரிவித்துள்ளது.
தற்போது உறுதிப்படுத்தப்பட்ட 62 வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் வழங்கிய பாதுகாப்பு நேர முடிவுகளுக்கான அறிவிப்புகள் ஆராயப்பட்டு வருகின்றது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கும் விடுதியில் வசிப்பவர்கள் அனைவரும் அடிக்கடி சோதிக்கப்படுவார்கள்.
சுகாதார அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் சுமார் 2,200 தொழிலாளர்கள் சோதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3,200 குடியிருப்பாளர்களுக்கான சோதனை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக, தங்கும் விடுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், தொழிலாளர்கள் 14 நாட்கள் தங்கள் அறையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் தேவையான ஆய்வுகள் மற்றும் மருத்துவ மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.