TamilSaaga

சிங்கப்பூர் ரயில்களில் AI தொழில்நுட்பத்தை இணைத்த அரசு… பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

சிங்கப்பூரில் இயங்கும் ரயில்களுக்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் தொழில்நுட்பத்தை அரசு பொருத்தியுள்ளது. ரயில்களுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் நோக்கில் ‘ஓவர் வாட்ச்’ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது ரயில்களில் ஏற்படும் சிறு கோளாறுகளை உடனடியாக கவனித்து அதை சீராக்கும் வழிகளை தருவதால் பெரிய தொழில் நுட்ப கோளாறுகள் வராமல் ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

கடந்த இரண்டு வருடமாக சிங்கப்பூரில் MRT வட்டப்பாதையில் இந்த தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டதை அடுத்து இந்த தொழில்நுட்பமானது ரயில்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெருவிரைவு ரயில்கள் எந்த நிலையத்தில் உள்ளன, வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் ரயில் தாமதமாக புறப்படுவதற்கு ஏதேனும் காரணம் இருந்தாலும் அதையும் தெளிவாக பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரயில்கள் எந்த பாதையில் அதிகம் தேவைப்படுகின்றன என்பதையும், தேவைக்கு அதிகமாக ரயில்கள் மற்றொரு தடத்தில் இருந்தால் இன்னொரு தடத்திற்கு மாற்றுவதற்கான யோசனையையும் கூறும் வகையில் ஓவர் வாட்ச் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் இறுதிக்குள் வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு மேற்கு ரயில் பாதைகளிலும் ஓவர் வாட்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சிங்கப்பூரின் SMRT தெரிவித்துள்ளது.

Related posts