TamilSaaga

இந்தியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யும் சிங்கப்பூர்… எவ்வாறு சாத்தியம்?

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதை சிங்கப்பூர் அரசு வரவேற்பதாக எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது. தற்பொழுது சிங்கப்பூர் அரசும் இந்திய அரசும் மின்சாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜூலை 30ஆம் தேதி, இரு நாடுகளும் மின்சாரத்தினை பகிர்ந்து கொள்வதற்காக அந்த மாதிரி நிகோபார் தீவுகள் வழியாக கடலுக்கு அடியில் கம்பி வடமூலம் மின்சாரத்தை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தது. இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை இந்தியாவானது சிங்கப்பூருக்கு விற்க முடியும். எனவே அதற்கான வழிமுறைகளை தற்போது நிபுணர் குழு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மின்சார கட்டமைப்பை உருவாக்குவதற்காக நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழு இவ்வாண்டின் பிற்பகுதியில் கலந்து பேசுவதற்காக சிங்கப்பூர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் நிறைவேறும் பட்சத்தில் 4 கிலோ வாட் மின்சாரம் சிங்கப்பூருக்கு அண்டை நாடுகளிலிருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சிங்கப்பூர் எரிசக்தி அணையின் தெரிவித்துள்ளது.

Related posts